Tuesday, November 30, 2010

ஒரே மலேசியாவை... (டாக்டர் மகாதிர் )

1 Dec | செய்தி.

மக்கள் தங்களது இனம், வம்சாவளி ஆகியவற்றை மறந்து ஒரே மக்களாகப் பிணைந்தால் மட்டுமே பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் ஒரே மலேசியா கோட்பாடு வெற்றி பெற முடியும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறுகிறார்.

தேசிய ஒற்றுமையை அடைவதற்கு பாங்சா மலேசியா எனப்படும் மலேசிய இனத்தை உருவாக்கும் தமது 2020 இலட்சியத்திற்கு ஏற்ப நஜிப்பின் கோட்பாடு அமைந்திருப்பதாக அவர் சொன்னார்.

“நீங்கள் தேசிய ஒற்றுமை எனக் கூறும் போது நீங்கள் உங்களுடைய கடந்த காலத்தை, வம்சாவளியை, அடையாளத்தை மறந்து விட்டு நீங்கள் ஒரே மொழியைப் பேச வேண்டும். நீங்கள் பூர்வகுடி மக்கள் அல்லது பூர்வகுடி மக்கள் அல்லாதவர்கள் என்பதற்காக சலுகைகளையும் கேட்கக் கூடாது”, என்றார் அவர்.

கோலாலம்பூரில் மலேசிய-ஐரோப்பிய கலந்துரையாடல் நிகழ்வில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்த போது அந்த முன்னாள் பிரதமர் அவ்வாறு கூறினார்.

“ஒரே மலேசியா என்னும் கோட்பாடுகளை” பேசிக் கொண்டு அதே நேரத்தில் தங்களை குறிப்பிட்ட இனப் பின்னணியுடன் அடையாளம் காட்டிக் கொள்கின்றவர்களை மகாதீர் சாடினார்.

அந்தப் போக்கு ஒரே மலேசியா கோட்பாட்டுக்கு முரணாணது என்றார் அவர்.

“நாம் நம்மை மலாய் வம்சாவளி, சீன வம்சாவளி அல்லது இந்திய வம்சாவளி மலேசியர்கள் என அழைத்துக் கொள்ளக் கூடாது”, எனக் குறிப்பிட்ட மகாதீர், அந்த கடந்த காலத்தை மறந்தால் மட்டுமே ஒரே மலேசியாவுக்கு உண்மையான அர்த்தம் கிடைக்கும்”, என்றார்.

You can leave a response, or trackback from your own site.

One Response to “டாக்டர் மகாதீர்: நாம் ஒரே மலேசியாவை அடைய வேண்டுமானால் நமது வேர்களை மறந்து விட வேண்டும்”

  1. tiga malaysia says:

    நமது வம்சாவளியை மறக்க சொல்லும் அவர்..முதலில் அனைவரும் இந்நாட்டு மக்களே என்பதை புரிந்து கொள்ள வேண்டும் .அனைத்து இனத்வருக்கும் சமமான உரிமை வழங்க வேண்டும். தனி நபர் மேம்பாட்டுக்கு பர பட்சம் பார்க்க கூடாது….சிறப்பு சலுகைகள் குறிப்பிட இனத்வருக்கு மட்டும வழங்குவது..வேறுபாட்டை உருவாக்கிறது.. அனைவரது முன்னேற்றத்தை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்..

  2. Your comment is awaiting moderation.

    நீங்கள் பெரிய மனிதர் . உங்கள் கருத்தைச் சொல்வதற்கு உங்களுக்கு உரிமையுண்டு. அதைக்குறித்து என் கருத்தையும் சொல்கிறேன். எனக்காக கொஞ்சம் செவிகொடுங்கள். ஓர் இனம் மொழி,கலாசாரத்தை இழந்துவிட்டால்; மறந்துவிட்டால் அது தன்னுடைய முகத்தை மாத்திரமல்ல தன்னுடைய ஜீவனையே இழந்துவிடும் . உலகத்தில் நாகரீகமில்லாத காட்டுமிராண்டி சமூகம்கூட தன்னுடைய அடையாளத்தை விட்டுக்கொடுக்க முன்வராதே… அப்படியிருக்க , ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னமேயே உலகத்திற்கு நாகரீகம் கற்றுக்கொடுத்த மூத்த இனங்களான தமிழர்களையும் சீனர்களும் தங்களுடைய வேர்களை மறந்துவிடவேண்டும் என்று எப்படி நீங்கள் எதிர்பார்க்கலாம்? உங்களைப்போன்ற தலைவர்களுக்கு இது அழகல்லவே! நீங்கள் கோடிகோடியாகக் கொட்டிக்கொடுத்தாலும் எங்கள் இன உணர்வையும் மொழி உணர்வையும் ஒருபோதும் விட்டுக்கொடுக்கமாட்டோம். இந்த நாட்டில் மலாயக்காரர்களிடமுள்ள இன உணர்வையும் மொழி உணர்வையும் நான் கண்டு பிரமிக்கிறேன்; மதிக்கிறேன். அதுபோல் உங்களைப்போன்றவர்களும் மற்றவர்களை மதியுங்கள். தயவு செய்து வேரறுக்கும் ஆலோசனையை விட்டுவிடுங்கள். மற்றும் ஒன்று , மலேசியாவில் மலாய்க் காரர்கள் , சீனர்கள் , இந்தியர்கள் மற்றுமுள்ள யாவரும் இப்போதும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள். அரசியல்வாதிகள்தான் ஒற்றுமையிழந்து காணப்படுகிறார்கள். அரசியல்வாதிகளின் சுயநலத்திற்காக மக்களின் ஒற்றுமையையும் எதிர்காலத்தையும் தயைகூர்ந்து கெடுக்காமல் பார்த்துக்கொண்டால் அதுவே போதுமானது.

Leave a Reply

Monday, November 29, 2010

மலேசிய உச்சநீதிமன்றம் மீது விமர்சனம்
மலேசியா -வரைபடம்
மலேசியா -வரைபடம்
மலேசியாவில் சிறார்களை, அவர்களின் பெற்றோரில் ஒருவர் மற்றையவரின் அனுமதியின்றி,அதாவது தாய் அல்லது தந்தையின் விருப்பின்றி இஸ்லாம் மதத்துக்கு மாற்றமுடியுமா என்கின்ற கேள்விக்குப் பதிலளிக்காமல் அதிலிருந்து நழுவிச்செல்லும் போக்கைக் கடைப்பிடிப்பதாக அந்நாட்டு அதியுச்ச நீதிமன்றம் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.

அங்கு முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதவர்களும் தொடர்புபடுகின்ற சட்டரீதியான சிக்கல்களை தெளிவுபடுத்த வேண்டிய முக்கிய பொறுப்பு இந்த நீதிமன்றத்துக்கு இருக்கின்றமையே இங்கு சுட்டிக்காட்டப்படுகின்றது.

பெரும்பான்மை முஸ்லிம் மக்கள் வாழும் மலேசியாவில், வழக்குகளில் எவ்வெப்போதெல்லாம் இஸ்லாம் தொடர்புபடுகின்றதோ அந்த நேரங்களில் அந்நாட்டின் உச்சநீதிமன்றம் அரசியலமைப்பின் அதியுயர் தன்மையைப் பாதுகாக்கத் தவறிவிடுவதாக அனேகமான மனித உரிமைக்குழுக்கள் சுட்டிக்காட்டுகின்றன.

பெற்றோரில் ஒருவர் மட்டுமே, மற்றவரின் சம்மதமின்றி குழந்தையை மதம் மாற்றிவிடமுடியுமா என்கின்ற சர்ச்சைக்கு, ஒரே தடவையில், இனிவரும் காலம் முழுமைக்குமே பொருந்தக்கூடிய விதத்தில் தீர்ப்பொன்றை வழங்க வேண்டும் என்பதே நீதிமன்றத்தின் முன்னாலுள்ள வழக்கு.

இந்த வழக்கில் சம்மந்தப்பட்டுள்ள தம்பதியர் இருவரும்
இந்து மதமுறைப்படி 1998ம் ஆண்டில் திருமணம் புரிந்துகொண்டுள்ளனர்.

பின்னர், கணவன் இஸ்லாத்துக்கு மதம் மாறியதோடு அவர்களின் இரண்டு குழந்தைகளையும் கூட ரகசியமாக மதம் மாற்றியுள்ளார்.

இந்த வழக்கு நீதிமன்றத்துக்கு வந்த போது,மனைவியான சத்தியசீலன் ஷாமலாவும் அவர்களின் இரண்டு குழந்தைகளும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்ற சாதாரண நடைமுறைக் காரணத்தைக்காட்டி பிரதம நீதியரசர் வழக்கை தள்ளுபடிசெய்து விட்டார்.

குழந்தைகளின் பராமரிப்பு தொடர்பான வழக்கொன்றில் கணவனுடன் இழுபறியிலிருந்த நிலையிலேயே ஷாமலாவும் குழந்தைகளும் ஏற்கனவே ஒஸ்ட்ரேலியாவுக்கு சென்றுவிட்டனர்.

இரட்டை வகை நீதி முறைமை

நாட்டின் இஸ்லாமிய நீதிமன்றம் இரண்டு குழந்தைகளினதும் பாதுகாவல் உரிமையை தந்தைக்கே வழங்கியிருந்த நிலையில், சிவில் நீதிமன்றங்களோ அவர்களின் பராமரிப்பை தாயிடம் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு மலேசியாவின் இரட்டை வகை நீதி முறைமைக்குள் உள்ள முரண்பாடுகளையே பிரதிபலித்துக்காட்டுகின்றன.

இஸ்லாமிய சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டுமே ஏற்புடையது.அதேநேரம் முஸ்லிம் அல்லாதவர்கள் சிவில் சட்டத்தின் கீழ் வருகிறார்கள்.

இந்த நிலையில், முஸ்லிம் ஒருவரும் முஸ்லிம் அல்லாதவரும் தொடர்புபடுகின்ற வழக்குகள் மலேசியாவில் பல குடும்பங்களை திரிசங்கு நிலைக்கு தள்ளிவிட்டுள்ளன.

அங்கு குழந்தைகளின் பராமரிப்பு உரிமையைப் பெற்றுக்கொள்ள எண்ணும் பெற்றோர், சட்டத்தில் உள்ள ஓட்டைகளை தமக்கு சாதகமான பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்புள்ளதாக மலேசியாவின் சட்டத்தரணிகள் சங்கம் கூறுகின்றது.

கணவராலோ அல்லது மனைவியாலோ குழந்தைகள் ஒருதலையாக மதமாற்றப்பட்டு பிரித்து செல்லப்படுகின்றமையை தவிர்ப்பதற்காக அனேகமான பெற்றோர்கள் தமக்குள்ள ஒரே வழி நாட்டிலிருந்து தப்பிச் செல்வதே என அந்த சங்கம் தெரிவிக்கின்றது.

பெரும்பான்மை முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அல்லாத சமூகத்தினருக்கிடையிலான உறவுகளைப் பாதிக்கின்ற இவ்வாறான அடிப்படை சர்ச்சைகளை நாட்டின் அதியுச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி தீர்த்துவிடவேண்டுமென்பதே சட்டத்தரணிகள் சங்கத்தின் கோரிக்கை.

Monday, November 22, 2010

சாமிவேலு இல்லாத ..கா உடையும்”; கணவாய் ஆருடம்

மலேசிய வரலாற்றில் மிகவும் சுவையான அனுபவம் பெற்ற பெயர் சாமிவேலு. நகைச்சுவையும், புன்னகையும், கோபமும், ஆத்திரமும், அடாவாடித்தனமும், ஆணவமும் அதிகாராமும் கொண்டு, மலேசிய மக்கள் மட்டுமல்லாமல் உலகத்தமிழர்களின் கவனத்தையும் ஈர்ததவர் இவர்.

இவருக்கு இரண்டு மனைவிகள்; பயரங்கர லஞ்சம், பலே கில்லாடி. இந்தியர்களின் தாழ்மைக்கு இவரே காரணம் என தூற்றும் கூட்டத்தினரிடையே நிமிர்ந்த தலையோடு பவணி வந்த இவரை ..காவினர் அடுத்த ஆண்டு வரை தலைவராக இருக்கவேண்டும் என்ற அங்கீகாரத்தை கொடுத்திருப்பினும், அடுத்த வருடம் சனவரியில் விலகுவதாக அறிவித்துள்ளார்.

இவர் இல்லாத ..கா என்னவாகும்?

உலக காற்பந்து போட்டியின் முடிவை கணித்த கணவாய் (இன்றும் உயிருடன் உள்ளது) இதற்கான பதிலாக உடையும் என்ற பெட்டியில் உள்ள தீணியை திண்கிறது. அப்படி இல்லாவிட்டால், அப்படி ஒரு பெட்டியை வைத்தால் தின்னும் என்பது திண்ணம்.

தேர்தலில் தோல்வியடைந்த பிறகு தனது உண்மை மதீப்பீட்டை உணரத்தவறியதால் வண்மையான நச்சரிப்புக்கு ஆளாக்கப்பட்டார்.

தேர்தல் காலங்களின் போது ..காவின் வேட்பாளர்களை தானே தேர்வு செய்யும் நிலையிலிருந்து சாமிவேலு தற்போது அப்பணியை அம்னோ செய்வதை ஜீரணிக்க இயலாத நிலையில் உள்ளார். அமைச்சரவையில், ஒரு சிறப்பான பொதுப்பணித்துறையில் மூத்த அமைச்சராக இருந்து அதை தட்டிக்காத்து, அதன்வழி மருத்துவக்கல்லூரி, டெப் கல்லூரி போன்றவைகளுக்கு பாதை போட்டவர்.

அவரைப்பற்றிய நகைச்சுவைகளும் பல உண்டு; நெடுஞ்சாலைப் பாலங்கள் பழுதடைந்த போது அவரை பதவி விலகக்கோரியவர்களை சாடினார். தொலைக்காட்சி பேட்டியில் பாலம் அமைக்க எல்லா குத்தகைகளும் பூமிபுத்திராக்களுக்கு வழங்கப்பட்டது என்றும் அதற்கு கேள்வி கேட்பவர்களே பதிலை கொடுக்க வேண்டும் என்று அம்னோவை சாடினார்.

..காவை ஒரு இரும்புப்பிடிக்குள் வைத்து பாதுகாத்து வளர்த்தவர் சாமிவேலு. அதில் உருப்படியான தலைமைத்துவம் உருவாக வாய்ப்பில்லை அல்லது திறமையானவர் ..காவில் மாற்றுக்கருத்துடன் நடமாட வேண்டுமானால் அவருக்கு அடிபணிந்துதான் போக வேண்டும். ஆதரவாளர்கள் என்ற போர்வையில் பல நிலைகளில் அவருக்கு அருகாமையில் உள்ளவர்களுக்கு திறமை இருந்தாலும், அதில் தர்மம், நீதி, தியாகம், மானம். மரியாதை இருப்பது அரிதாகும். “ஆமாம் சாமிமட்டுமே போட்டு வருபவர்களிடம் எவ்வகை துணிவை காணஇயலும்.

சாமிவேலுக்கு பிறகு ..கா முற்றான பிளவுகளை எதிர்நோக்கும் என்பதை அரசியல் கண்ணோட்டம் கொண்டவர்கள் ஏற்றுக்கொள்வர். அப்படி பிளவுபடுவதால் அது ..காவுக்கு பலவீனம் என்று பொருள் கொள்ளஇயலாது. அதன் முக்கியத்துவமே இந்த பிளவுக்கான காரணமாகும்.

இந்தியர்களை ஒற்றுமைப்படுத்திய வரலாறு ..காவுக்கு சொந்தமானது. அதை பிளவு படுத்திய பாவமும் அதையே சாரும்.

ஐயன், தலைநகர்

About the Author

Admin has written 482 stories on this site.

  • sugu wrote on 9 October, 2010, 0:57

    ………….be still in building our community and hopefully there is no more selfish indian leaders that will lead us in future………this is samyvelu harvest period for what he had sow to his community………let the people knows good and bad deeds of the leaders bthat leads us today….so dont give up revealing the facts and truth so rthat our community will be updated on the leaders act of “”"”service for the people”"”"”"……..

  • Endrum Inthiyan Valga wrote on 11 October, 2010, 10:28

    talaivargal palar maaralam; aanal naam talaiyelutthai matrakudiyan taan unmaiyaana talaivan! we still waiting to see who can be done that…

  • tamilvanan wrote on 22 October, 2010, 11:39

    இனி சாமிவேலு தொடர்ந்து இருந்தாலும் கா உடையும்.

  • jegaveeraphandian wrote on 22 November, 2010, 11:19

    முரடனை அடக்க ஒரு முரடன்தான் தேவை . நல்லவர்களை வழிநடத்த ஒரு நல்லவந்தான் தேவை. அடாவடிப் பேர்வழிகள் நிரம்பிய அரசியல் உலகத்திற்கு சாமிவேலூதான் சரியான ஆளு . அது இப்போ தெரியாது .போகப்போகத் தெரியும் . தயவுசெய்து இந்த வார்த்தைகளைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். சாமிவேலு இல்லாத மலேசியா அரசியலை நமது பேராசைபிடித்த இந்தியப் புது இளந்தலைவர்கள் எப்படியெல்லாம் சந்தைச் சிரிக்கச் செய்யப்போகிறார்கள் என்பதை