Wednesday, September 23, 2009
Tuesday, September 22, 2009
“எளிதில் மறக்கும்” மகாதீர்
September 21, 2009, 11:21 am மலேசியாஇன்று பிரிவு: செய்தி
அனைவரும் போற்றத்தக்க வாழ்க்கையை வாழ்ந்து வரலாற்று ஏடுகளில் முத்திரைகளைப் பதித்த ஒருவர் ஒரு நாள் காலையில் எழுந்தவுடன் பல முக்கியமான நிகழ்வுகளை மறந்து விட்டதை உணர்ந்தால் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.
நிபுணர்கள் அந்த நிலையை தெரிந்த மறதிகள் என்று கூறுவர். எதிர்பாராத இடர்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்த முறையை பயன்படுத்துவது பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். ஒரு வகையான மருந்தைப் பயன்படுத்துவதின் மூலம் அந்தப் பேரிடம் பற்றிய நினைவுகள் முற்றாக அற்றுப் போய் விடும் என்பதை அவர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
அரசியல்வாதிகளுக்கு அத்தகைய மருந்துகள் தேவையே இல்லை. அவர்களுடைய மூளையில் ஏதோ ஒரு ரசாயனம் சுரந்து தெரிவு செய்யப்படும் நினைவுகளை மறக்கடித்து விடுகின்றன.
அதற்கு நல்ல எடுத்துக்காட்டு நல்ல மருத்துவரான மகாதீர் முகமட் ஆகும்.
தலைமைத்துவத்தைத் துறந்ததிலிருந்து தெரிவு செய்யப்படும் நினைவுகளை மறக்கும் வியாதிக்கான அறிகுறிகள் அவரிடம் நிறையக் காணப்படுகின்றன.
தாம் ஆட்சி புரிந்த போது பேசக் கூடாத விஷயங்களை அந்த முன்னாள் பிரதமர் இப்போது பேசி வருவது தான் அந்த அறிகுறிகள் ஆகும்.
பேச்சுச் சுதந்திரம், குறை கூறுவதற்கான உரிமை, அரசியல்வாதிகள் களங்கமற்றவர்களாக இருக்க வேண்டும் என்ற விஷயம் ஆகியவற்றின் மீது மகாதீர் திடீரென்று தமது பாசத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
காணாமல் போக மறுக்கும் முன்னாள் துணைப் பிரதமர்
மகாதீர் சிறந்த சாணக்கியர், துல்லிதமாக திட்டமிடுவர், தொலைநோக்குடையவர் என்பதை யாரும் மறுக்க முடியாது. அவர் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டாலே போதும் பெரும் தாக்கம் ஏற்பட்டு விடும்.
84 வயதிலும் அவருடைய தெளிவான சிந்தனையும் உடல் கட்டும் பலரை பொறாமைப்பட வைத்துள்ளது.
மகாதீர் சம்பந்தப்பட்ட வரை அந்த அம்சம் ஏற்றமா இறக்கமா என்பது பலருக்கு புரியவில்லை.
“துணைப் பிரதமர்களை அழிப்பதில்” வல்லமை பெற்ற அவர் தமக்கு வாரிசு எனக் கருதப்பட்ட அன்வார் இப்ராஹிமைக் களையெடுத்தார். அந்த அன்வார் காணாமல் போக மறுத்து இப்போது மீண்டும் உயிர்த்தெழுந்து மகாதீரை மிரட்டிக் கொண்டிருக்கிறார்.
பத்து ஆண்டுகளுக்கு பின்னர் அன்வார் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து கூட்டணியை அமைத்தார். கடந்த பொதுத் தேர்தலில் அது ஐந்து மாநிலங்களை வென்றது (இப்போது 4 மாநிலங்கள்). ஆளும் கூட்டணிக்கு காலம் காலமாக நாடாளுமன்றத்தில் இருந்து வந்த மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை அவர் கிடைக்காமல் செய்து விட்டார்.
அந்த நிலை ஏற்பட்டதற்கு தம்மை அடுத்து பிரதமராக பொறுப்பேற்பதற்குத் தாம் தெரிவு செய்த அப்துல்லாவே காரணம் என்று மகாதீர் குற்றம் சாட்டினார்.
அந்த நெருக்குதலைத் தாங்க இயலாமல் அப்துல்லாவும் வெளியேறி விட்டார்.
உண்மையில் அப்துல்லாவைப் பற்றி மகாதீர் தெரிவித்த குறைகள் அவர் பதவி விலகிய அடுத்த ஆண்டு அதாவது 2004 ல் நடைபெற்ற தேர்தல்களில் பாரிசான் நேசனல் மகத்தான வெற்றிகளைப் பெற்ற போது அப்துல்லாவுக்கு வழங்கிய பாராட்டுக்களிலிருந்து நேர்மாறானவை.
ஆனால் 2008 தேர்தலுக்குப் பின்னர் மகாதீரின் “தெரிவு செய்யப்படும் நினைவுகளை மறக்கும் வியாதி” மோசமடைந்தது.
அம்னோ தோற்கடிக்கப்பட்டதும் அதன் முன்னாள் தலைவர், கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்து இன்னொரு சர்ச்சையை உருவாக்கினார். கட்சி நலன்களைக் காட்டிலும் அவர் சொந்த நலன்களை முக்கியமாகக் கருதினார். ஆனால் மகாதீர் தமது முடிவுக்கு வேறு விதமாகக் காரணம் கூறினார்.
தேர்தலுக்கு முன்பு அப்துல்லா மீது தொடர்ச்சியாக பாய்ச்சிக் கொண்டிருந்த ஏவுகணைகள் அம்னோவுக்கும் பாரிசான் நேசனலுக்கு ஏற்படுத்திய பாதிப்பை அவர் மறந்து விட்டார். அவரது கண்டனங்கள் உண்மையில் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக அவர் செயல்படுகிறாரா என்று கூட பலரை எண்ணத் தூண்டியது.
அந்த முன்னாள் அம்னோ தலைவர் கட்சி உறுப்பினர்களும் அடித்தளத் தலைவர்களும் எதிர்ப்பு வாக்குகளைச் செலுத்துவதற்கு அவர் வழி வகுத்து விட்டார் என்றால் தவறு இல்லை.
தமது இன்னொரு வாரிசான நஜிப் அப்துல் ரசாக் பதவி ஏற்றதும் காயங்கள் ஆறிவிடும் என மகாதீர் எதிர்பார்த்தார். ஆனால் அது நிகழவில்லை. நஜிப் பொறுப்பேற்றது முதல் அவரை மங்கோலிய விவகாரம் தொடர்ந்து மிரட்டிக் கொண்டிருக்கிறது. பல இடைத் தேர்தல்களும் எதிர்கட்சிகளுக்குச் சாதகமாக அமைந்து விட்டன.
மகாதீர் இப்போது கவலைப்படத் தொடங்கியுள்ளார்
தமது எதிரியான அன்வாரின் பெரிய குடும்பத்தைக் கருத்தில் கொண்டு பல படுக்கை அறைகளுடன் நிர்மாணிக்கப்பட்டதாகக் கூறப்படும் பிரதமர் இல்லமான ஸ்ரீ பெர்தானாவுக்குள் அன்வார் குடியேறுவதை காணும் வரை மகாதீர் உயிரோடு இருப்பாரா?
புதிய பணி: சாமிவேலுவை ஒழிப்பது
அந்த பதற்றமான எண்ணத்திலிருந்து தம்மை விடுவித்துக் கொள்வதற்காக மகாதீர் புதிய பயணம் ஒன்றை இப்போது தொடக்கியுள்ளார். இன்னொரு அரசியல் வாழ்க்கைக்கு சாவு மணி அடிப்பது தான் அந்தப் பணியாகும்.
அரசியலில் நண்பர்கள் எப்போதும் நண்பர்களாக இருக்கவும் முடியாது என்று பல ஆண்டுகளுக்கு முன்பு மகாதீர் கூறியிருந்தார். ஆகவே மஇகா தலைவர் எஸ் சாமிவேலுவுக்கு எதிராக அவர் தமது கத்தியைத் தீட்டத் தொடங்கியிருப்பது பற்றி யாரும் ஐயம் கொள்ள வேண்டியதில்லை.
22 ஆண்டுகளுக்கு நாட்டையும் தமது கட்சியையும் வழி நடத்திய மகாதீர், சாமிவேலு தம்மை விட ஏழு ஆண்டுகள் கூடுதலாகக் கட்சித் தலைவராக இருப்பதின் மூலம் பெரும்பாவத்தைச் செய்து விட்டதாக கூறுகிறார்.
தாம் இப்போது “மோசமான அடைவு நிலையை” பெற்றிருப்பதாகக் கூறும் சாமிவேலுவை தாம் தமது ஆட்சிக் காலத்தில் அமைச்சராக வைத்திருந்து அவருக்கு புகழாரம் சூட்டியதை மகாதீர் சௌகரியமாக மறந்து விட்டார்.
கடந்த காலத்தில் தலையிடா கொள்கையை வலியுறுத்தி வந்த மகாதீர், இப்போது அந்த சொத்து சுமையாக மாறி விட்டதால் அந்த பொன்னான விதியை தகர்க்க விரும்புகிறார்.
ஆனால் சாமிவேலுவின் கையை முறுக்குவதால் நிலமைகள் மீண்டும் சாதகமாகி விடும் என்று எதிர்பார்க்க முடியாது.
உண்மையில் அது பாரிசான் நேசனலுக்கு மேலும் பாதகத்தையே கொண்டு வரக் கூடும். ஏனெனில் அந்த மஇகா தலைவருக்குக் கட்சியில் மகத்தான ஆதரவு இன்னும் இருக்கிறது. கட்சித் தேர்தல்களில் தலைவருடைய ஆட்கள் வெற்றி பெற்றிருப்பது அதனைக் கண்கூடாக உணர்த்துகிறது.
மக்களிடையே செல்வாக்கு பற்றி நஜிப் ஆற்றிய உரை மஇகா பேராளர்களின் அமோகமான கைதட்டலைப் பெற்றதே தவிர தேர்தலில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. மாறாக உறுப்புக் கட்சிகளில் பிரதமருக்கு உள்ள செல்வாக்கு பற்றிய கேள்வியை அது உருவாக்கி விட்டது.
சாமிவேலி வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டால் மஇகா உறுப்பினர்களிடையே வெறுப்பு அதிகரித்து அவை எதிர்ப்பு வாக்குகளாக மாறிவிடக் கூடும்.
தலைவர் விலகி விட்டால் இந்திய சமூகம் விரிந்த கரங்களுடன் கண்ணீர் மல்க மஇகாவுக்குள் இணைய ஓடோடி வரும் பாலிவுட் சினிமா காட்சி நிகழும் என எதிர்பார்க்க முடியாது.
விரும்பியோ விரும்பாமலோ ஹிண்ட்ராப் நடத்திய வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆர்ப்பாட்டம் நாடக வசனத்தையே மாற்றி விட்டது.
அம்னோ நடத்துகிறது. மற்றவை அதற்கு ஏற்ப ஆட வேண்டும்
பிரபல இந்தித் திரைப்பட நடிகர் ஷாருக்கானின் பெரிய விசிறி என்று கூறப்படும் மகாதீர் ஓர் ஆணி கழன்று விட்டதால் பாரிசான் நேசனல் இயந்திரம் செயல் இழக்கும் விளிம்பில் நிற்கவில்லை என்பதை மகாதீர் புரிந்து கொள்ள வேண்டும்.
அந்த ஆளும் கூட்டணியும் அதன் தலைவர்களும்- மகாதீர் உட்பட கடந்த கால நிகழ்காலத் தலைவர்கள்- நம்பகத்தன்மை நெருக்கடியை எதிர்நோக்குகின்றனர்.
“செல்வாக்கு” என்ற வார்த்தையைப் பற்றிப் பேசும் போது பாரிசான் நேசனல் அரசியவாதிகள் புகழ் பெற்றுள்ளனர் என்று கூறுவதை விட புகழ் மங்கியவர்கள் என்று தான் கூறவேண்டும்.
மலாய்க்காரர் அல்லாதவர்களைப் பொறுத்த வரை எல்லா காரியங்களை தான் நடத்தி மற்றவர்கள் அதற்கு ஏற்பட ஆட வேண்டும் என்று அம்னோ வலியுறுத்தும் வரை, அதன் குரலான உத்துசான் மலேசியா தொடர்ந்து நஞ்சைக் கக்கும் வரையில் அது ஒரே மலேசியாவாக இருக்காது. இரண்டு மலேசியா தான்.
ஆனால் பக்காத்தான் ராக்யாட்டில் எண்ணம் வேறு விதமாக இருக்கிறது.
பக்காத்தான் கூட்டணியில் விரிசல்கள் நிறைந்திருந்தாலும் உறுப்புக் கட்சிகளிக்கு இடையில் சமமான சூழ்நிலையும் மரியாதையும் காணப்படுவது போல் தோன்றுகிறது.
எதிர்கட்சித் தலைவரிடமும் தெரிவு செய்யப்பட்ட மறதிகளுக்கான அறிகுறிகளும் காணப்படுவதாக பார்வையாளர் ஒருவர் கூறினார். இப்போது மேலோட்டமாக பார்க்கும் போது இனவாதியாக காணப்படவில்லை என்றார் அவர்.
ஆகவே “சாலைத் தடுப்புக்கள்” ஏற்படுத்தப்படாவிட்டால் அந்த எதிர்க்கட்சித் தலைவரின் குடும்பம் புத்ராஜெயாவுக்கு வேகமாக செல்வதிலிருந்து தடுப்பதற்கு எதுவும் இல்லை என்று தோன்றுகிறது.
இந்த நூற்றாண்டின் முதல் கால் பகுதியில் மலேசியாவில் அரசாங்கம் மாறும் என்று ஜோசியர் ஒருவர் கூறியதாக தாம் பல ஆண்டுகளுக்கு முன்பு மகாதீரை எச்சரித்ததாக அண்மையில் தனிப்பட்ட விருந்து நிகழ்ச்சியில் மூத்த பாரிசான் நேசனல் தலைவர் ஒருவர் கூறினார்.
தேர்வு செய்யப்பட்ட நினைவுகளை மறக்கும் வியாதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதனை யாரும் மறக்க முடியாது.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இதனை எழுதியவர் ஆர் கே ஆனந்த் மலேசியாகினி குழுவில் ஓர் உறுப்பினர்.
நன்றி மலேசியா இன்று .
2. # 2 JEGAVEERAPHANDIAN Says:
September 22nd, 2009 at 9:59 pm
டத்தோ ஸ்ரீ சாமிவேலு இல்லாத ம.இ.கா . வை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது.அந்த இடத்தை இப்போதைக்குப் பூர்த்தி செய்யக்கூடியவராக டத்தோ சுப்ராவை வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் சுப்ரவால் சாமிவேலூவைப்போல் சாதாரன மக்களோடு பழக முடிந்தாலும் சுப்ராவின் குடும்பத்தினர் பொதுமக்களின் வருகையை சாமிவேலுவின் குடும்பதினரைப்போல் அனுசரித்துப்போக முடியாது. சாமிவேலுவின் வீட்டிற்கு வெளியேகூட யாராவது நின்றுகொண்டிருந்தால், காரில் வெளியேறினால் கூட பார்த்துவிட்டால் காரின் சன்னலைத் திறந்து என்னைப் பார்க்கவா வந்திருக்கிறிங்க ? என்று ஒரு வார்த்தைக் கேட்டு விட்டுத்தான் போவார் சாமிவேலு . ஆனால் டத்தோ சுப்ராவிடம் இதை எல்லாம் எதிர்பார்க்க முடியாது. டத்தோ ஸ்ரீ சாமிவேலுவை சுலபமாக வெளியே போங்கள் என்று சொல்கிறார்கள் ஆனால் சாமிவேலு இல்லாத ம. இ.கா வை எதிரிகள் விரைவில் காணமல் செய்து விடுவார்கள். சுப்ரா மீது சாமிவேலு இவ்வளவு கோபம கொள்ள வேண்டியதில்லை . சாமிவேலுவை இந்தியர்களுக்கு ஏன் பிடிக்கவில்லை என்றால் அவருடைய கண்ணை மூடிக்கொண்டு பாரிசனை ஆதரிக்கும் நிலைதான். உதயகுமார்கூட சாமிக்கு இந்த நாட்டை ஆளும் திறமை உள்ளது என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டதை சிந்திக்கவேண்டும். ம. இ. கா. அம்னோவுக்கு தலையாட்டும பொம்மையாக இருப்பதை புதிய தலைமுறைகள் விரும்பவில்லை. அதுதான் ம .இ.காவின் சரிவுக்கு காரணம்.

நிலம் யாருக்குச் சொந்தம்?
பினாங்கில், கம்போங் பாலா நில விவகாரம் குறித்து இது வரைக்கும் எந்த கருத்தையும் நான் கூறவில்லை. இதற்கு ஒரு காரணம், அந்த விவகாரம் குறித்து ஏற்கனவே பல கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. எனவே, என்னால் அவ்வளவாக எதனையும் கூற இயலவில்லை.
பார்க்கப்போனால், அந்த விவகாரம் குறித்து தெரிவிக்கப்பட்ட பெரும்பாலான கருத்துக்கள் யாவும் உணர்ச்சிகரமானதாக உள்ளன. எடுக்கப்பட்ட அணுகுமுறையில், ஏழை இந்திய நில உரிமையாளர்கள், சக்திவாய்ந்தவர்களால் ஒடுக்கப்படுகின்றனர். அதோடு, பினாங்கு அரசாங்கம், பக்காத்தான் ராயாட் அரசாங்கம் என்பதால், அது, அந்த மக்களை மேலும் ஆத்திரமடையச் செய்துள்ளது. பக்காத்தான் அரசாங்கம், மேம்பாட்டாளர் “பக்கம் சாய்வதை” விடுத்து, மக்களுக்காகப் போராடும் என்று அவர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
சிலர், லிம் குவான் எங்கையும் சாடினர். முந்தைய தேசிய முன்னணி அரசாங்கத்தின் முடிவை குவான் எங் மாற்ற வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டனர். பக்காத்தான் ராயாட் முதலமைச்சர், அதுவும் ஜசெகவைச் சேர்ந்தவர், ஏன் மக்கள் “போராட்டவாதி”யாக மாறவில்லை என்பதைத்தான் அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.
அந்த நாளில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை நான் நினைவு கூறுகிறேன். அப்போது, எனது தாத்தாவின் நிலத்தை அரசாங்கம் எடுத்து கொண்டது. அந்த கட்டத்தில், அவர் பினாங்கு கவர்னராக இருந்தார். கோலாலம்பூரில் உள்ள பூமலையில், ஒரு துண்டு நிலத்தில், தமது ஓய்வு இல்லத்தை அவர் அப்போதுதான் கட்டி முடித்தார்.
இருப்பினும், மலேசியாவின் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை கட்டுவதற்கு அந்த துண்டு நிலமும், அதைச் சுற்றிலும் உள்ள நிலமும் அரசாங்கத்துக்கு தேவைப்பட்டது. ஆக, அந்த மலைப்பகுதியில் உள்ள அனைத்து நிலத்தையும் அரசாங்கம் எடுத்துக் கொண்டது. சுவரில் பூசப்பட்ட சாயம் காய்வதற்கு முன்னரே, எனது தாத்தா, தமது ஓய்வு இல்லத்தை இழந்தார்.
அந்த வீட்டை அழகுப்படுத்துவதில், இறுதி வடிவம் கொடுக்கப்பட்டதையும் நான் பார்த்தேன். சிறிது காலத்துக்குப் பின்னர், அந்த வீடு முற்றாக இடித்து தள்ளப்பட்டது.
எனது தாத்தா, பினாங்கு கவர்னராக இருக்கலாம், ஆனால் அவரது நிலத்தை அரசாங்கம் எடுக்க விரும்பினால், அது குறித்து எதையும் செய்ய முடியாது.
கடந்த 50ஆண்டுகளில், பல துண்டு நிலங்களை அரசாங்கம் கையகப்படுத்தியதை நான் பார்த்துள்ளேன். அவற்றில் சில, எனது நண்பர்களுக்கும் குடும்பங்களுக்கும் சொந்தமானவை. எனது சொந்த நிலத்தையும் கூட அரசாங்கம் கையகப்படுத்தியது.
துரதிஷ்டவசமாக, நம்முடைய நிலத்தை அரசாங்கம் எடுக்க விரும்பினால், நம்மால் எதையும் செய்ய முடியாது. தேசிய நிலச் சட்டத்தின் கீழ், நாம் நில வரியைச் செலுத்தும் வரைக்கும், அரசாங்கத்துக்கு தேவைப்படாதவரைக்கும், அந்த நிலம் மீதான உரிமையை நாம் கொண்டுள்ளோம். அரசாங்கத்துக்கு தேவைப்படும்போது, நம்முடைய நிலம் மீதான உரிமையை நாம் இழக்கிறோம். அது, குடும்பத்தில் எத்தனை தலைமுறைக்கும் இருந்திருக்கலாம்.
உண்மையில், நிலம் மீதான நமது உரிமை, அங்கீகரிக்கப்பட்ட பயனீடு இருக்கும்வரைதான். அந்த பயனீட்டை நாம் மாற்றவிரும்பினால், அதற்கு நாம் விண்ணப்பிக்க வேண்டும். நில மாற்றத்துக்கு அரசாங்கம் அங்கீகரித்தால்தான், பயன்பாட்டை நாம் மாற்றலாம்.
எனவே, விவசாய நிலம், விவசாய நோக்கத்துக்காக மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும். அதுவும் நெல் நடவுக்காக இருந்தால், அங்கு நெல்தான் பயிர் செய்யலாம். மற்ற பயிர்களை சாகுபடி செய்ய முடியாது.
சுருங்கக் கூறின், நிலம் நமக்குச் சொந்தமானது என நாம் கருதினாலும்கூட, “நம்முடைய” நிலத்தில் விருப்பம்போல் நாம் எதையும் செய்து விடமுடியாது.
மேலும், நிலத்துக்கான நமதுரிமையை கூறவேண்டுமானால், அதற்கு ஆறடி மேலும், ஆறடி கீழும் வரைக்கும்தான். எனவே நம்முடைய நிலத்தில் 100அடிக்குக் கீழ், நாம் எண்ணெயை கண்டு பிடித்தால், அந்த எண்ணெய் நமக்குச் சொந்தமானதல்ல. ஆனால் அது அரசாங்கத்துக்குச் சொந்தமானது. நம்முடைய நிலத்துக்கு உயரே எந்த விமானமும் பறந்து செல்வதையும் நம்மால் தடுக்க முடியாது. காரணம், நமது நிலத்தில், ஆறடி உயரத்துக்கு மேல் உள்ள வான்பகுதி, நமக்குச் சொந்தமானதல்ல. ஆனால் அரசாங்கத்தினுடையது. உண்மையில், நிலத்தை நிரப்புவதற்கு அல்லது சமப்படுத்துவதற்கும் கூட, அரசாங்கத்தின் ஒப்புதல் உங்களுக்குத் தேவைப்படுகிறது.
இது என்னுடைய எளிய விளக்கம். இதில் முக்கியமானது என்னவென்றால், நம் வசமுள்ள நிலம் நமக்குச் சொந்தமானதல்ல. அந்த நிலத்தைப் பயன்படுத்தும் உரிமையைதான் நாம் கொண்டுள்ளோம். அந்த நிலம் அரசாங்கத்துக்குச் சொந்தமானது. அதை எப்போது வேண்டுமானாலும் அரசாங்கம் நம்மிடமிருந்து எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால், அரசாங்கமும், நம்முடைய நிலத்தை அப்படியே எடுத்து விட முடியாது. அதற்கான காரணம் இருக்க வேண்டும். சமுதாயத்தின் தேவைகளுக்காக, நிலத்தை மேம்படுத்துவதற்கு அந்த நிலம் தேவைப்படுகிறது என்பதுதான், அந்த காரணமாக இருக்க வேண்டும். ஆக, சமுதாயம் பயனடைவதற்காக, தனிப்பட்டவர்களான நாம், நமது நிலத்தை இழக்க வேண்டும்.
என்றபோதிலும் 25ஆண்டுகளுக்கு முன்னர், திரெங்கானு அரசாங்கம் பேரளவிலான நிலங்களை எந்த நோக்கமுன்றி அப்படியே எடுத்துக் கொண்டதை நான் நினைவு கூர விரும்புகிறேன். அந்த காலக் கட்டத்தில், மாநில அரசாங்கம், நிறைய பணத்தை ரொக்கமாக வைத்திருந்தது. அதை எப்படி செலவழிப்பது என்பதும் அதற்குத் தெரியவில்லை - அது பெற்றுக் கொண்ட எண்ணெய் உரிமப் பணத்துக்கு நன்றி - எனவே, விருப்பம்போல் நிலங்களை அவர்கள் பெற்றுக் கொண்டனர். எதிர்கால மேம்பாட்டு நோக்கங்களுக்காக, மாபெரும் நிலப் பொருளகமொன்றை அவர்கள் நிர்மாணித்தனர்.
அந்த நிலங்களைப் பெற்றுக் கொண்ட பின்னர், அவற்றை என்ன செய்வது என்று அரசாங்கத்துக்குத் தெரியவில்லை. அனைத்து நிலங்களும் மலாய்க்காரர்களுக்குச் சொந்தமானவை. ஆனால், வேறு வழியின்றி அந்த மலாய்க்காரர்கள் தங்களது நிலங்களை ஒப்படைத்தனர். அவர்களில் பெரும்பாலோர், தங்களது வாழ்வாதாரத்தை இழந்த நெல் விவசாயிகள். அவர்களுக்கு வழங்கப்பட்ட பணமும் விரைவில் கரைந்தது. அந்த நிலங்கள், அவர்களிடம் இருந்திருந்தால், நெற்பயிரீட்டை அவர்கள் தொடர்ந்திருக்கலாம்.
ஒன்றை மட்டும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அரசாங்கம் நிலத்தை இலவசமாக எடுத்துக் கொள்ள முடியாது. நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அந்த இழப்பீட்டுத் தொகையும், சந்தை மதிப்பு மற்றும் நமக்கு ஏற்படும் இழப்புக்களுக்கு ஏற்ப இருக்க வேண்டும்.
ஆக, நம்முடைய நிலத்தை கையகப்படுத்தும்போது, அரசாங்கத்தை நம்மால் எதிர்க்க முடியாது என்றாலும், நமக்கு எவ்வளவு இழப்பீடு கொடுக்கப்படுகிறது என்பதை நாம் ஆட்சேபிக்கலாம்.
அரசாங்கம் நமது நிலத்தை எடுத்துக் கொள்ளும்போது, அது வழங்கும் இழப்பீட்டுத் தொகையை ஏற்கப்போவதில்லை என்று நாம் கூறி விட முடியாது. அந்த இழப்பீட்டை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் “ஆட்சேபத்தின்கீழ்” இழப்பீட்டுத் தொகையை ஏற்கிறோம் என குறிப்பிடும்படி, நாம் கேட்டுக் கொள்ள வேண்டும். பின்னர், அதிக இழப்பீடு வழங்கும்படி, நீதிமன்றம் உத்தரவிட வேண்டுமென நாம் மனு செய்ய வேண்டும்.
எடுத்துக்காட்டாக, நம்முடைய பத்தாயிரம் சதுர அடி நிலத்தை அரசாங்கம் எடுத்துக் கொண்டு, இழப்பீடாக ஒவ்வொரு சதுர அடிக்கும் 50 ரிங்கிட்டை அது வழங்கியிருக்கலாம். இது மிகவும் குறைவு என நாம் கருதுகிறோம். உண்மையில், சந்தை மதிப்புக்கு ஏற்ப, ஒவ்வொரு சதுர அடிக்கும் 120 ரிங்கிட் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அடுத்து, நமது நிலத்தில் இன்று நாம் ஒரு வீட்டைக் கட்டியிருந்தால் அதன் மதிப்பு குறைந்தது ரிம 350,000.00 ஆக இருக்கலாம்.
ஆக, இழப்பீடு தொகையை எதிர்த்து, நாம் நீதிமன்றம் போகலாம். நீதிமன்றம், நமது வாதத்தை ஏற்றுக் கொண்டால், அப்போது அரசாங்கம், ஒரு சதுர அடிக்கு 70 ரிங்கிட் வேறுபாட்டை நமக்கு செலுத்த வேண்டும். அதோடு அந்த வீட்டுக்காக 350,000.00 ரிங்கிட்டையும் அது வழங்க வேண்டும்.
ஆனால் ஒவ்வொரு சதுர அடிக்கும் 50ரிங்கிட் இழப்பீட்டுத் தொகையை முதலில் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதனை நாம் மறுக்கமுடியாது. அந்த இழப்பீட்டுத் தொகையை ஏற்றுக் கொள்ள நாம் மறுத்தால், கூடுதல் தொகைகை கோர முடியாது. ஆனால் அந்த இழப்பீடை நாம் ஏற்றுக் கொள்ளும்போது, அது குறித்த பத்திரங்களில், அதனை ஆட்சேபத்தின்பேரில் ஏற்றுக் கொள்வதாக நாம் குறிப்பிட வேண்டும். அப்போதுதான் கூடுதல் தொகை கோரி நீதிமன்றம் செல்லலாம்.
கம்போங் புவா பாலா நிலத்தை பினாங்கு அரசாங்கத்தால் எடுத்துக் கொள்ள முடியுமா, முடியாதா என்பது பிரச்னையல்ல. அதனால் எடுத்துக் கொள்ள முடியும். ஒன்றை மட்டும் நம்மால் வாதிட முடியும். அதாவது, சரியான நடைமுறைகளைப் பின்பற்றி, அரசாங்கம் அந்த நிலத்தை கையகப்படுத்தியதா என்பதை நம்மால் வாதாட முடியும். அடுத்து, நாம், அந்த நிலத்தின் சட்டப்பூர்வமான உரிமையாளராக இருந்தால், வழங்கப்படும் இழப்பீடு மிகக் குறைவானது எனக் கருதினால், அதனை எதிர்க்கலாம்.
மேலும் தார்மீக அம்சங்களிலிருந்து சட்ட அம்சங்களை பிரிக்க வேண்டியதும் அவசியம். அந்த நிலத்தை கையகப்படுத்துவதற்கு அரசாங்கம் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டிருக்கலாம், அதுவும் நடைமுறைகளைப் பின்பற்றி அதனைப் பெற்றிருக்கலாம். ஆனால் அந்த நிலத்தை அவர்கள் கையகப்படுத்துவது தார்மீக ரீதியில் சரியா? ஒட்டுமொத்த சமுதாயமும் பயன்பெறுவதற்கு, மேம்பாட்டு நோக்கங்களுக்காக அந்த நிலம் பெறப்படுகிறதா? அல்லது அதிலிருந்து, யாரோ ஒருவர் ஆதாயம் ஈட்டி, பெரும் பணக்காரராகுவதற்கு அது ஆர்ஜிதம் செய்யப்படுகிறதா?
சுருங்கக் கூறினால், அந்த விவகாரத்தின் நோக்கம் ஆராயப்பட வேண்டும். சட்டப்படி அது சரியானதாக இருக்கலாம். ஆனால் தார்மீக அடிப்படையில், அது சரியில்லாமல் இருக்கலாம். எடுத்துக்காட்டாக, ரோஸ்மா மன்சூரை நீங்கள் குறைகூறியதற்காக விசாரனையின்றி பத்தாண்டுகளுக்கு உங்களை சிறையிலடைப்பதற்கு தடுப்புக் காவல் ஆணையில் கையெழுத்திடுவதற்கு அமைச்சருக்கு சட்டப்பூர்வமான உரிமை உண்டு. ஆனால் சட்டப்பூர்வமாக அவர் செய்துள்ளபோதிலும் தார்மீக ரீதியில் அது சரியா?
இதைதான், கம்போங் புவா பாலா விவகாரத்தில் விவாதிக்க வேண்டும். ஒரு பெரிய நோக்கத்துக்காக நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டதென்றால் பின்னர் இரண்டாவது கட்டத்துக்கு நாம் செல்ல வேண்டும். அந்த இரண்டாவது கட்டம் என்னவென்றால், அந்த நில உரிமையாளர்கள், நிலப்பட்டாக்களை கொண்டிராத புறம்போக்கு குடிசைவாசிகளாக இருந்தாலும்கூட அவர்களுக்கு முறையான இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதா என்பதாகும்.
துரதிஷ்டவசமாக, முன்னேற்றப் பாதையில் நாம் தடங்கலாக நிற்க முடியாது. ஆனால் முன்னேற்றத்தினால், நாம் பாதிப்படையக்கூடாது. சில வேளைகளில் சாலைகளை விரிவாக்கி, பள்ளிக்கூடங்களையும் மருத்துவமனைகளையும் அவர்கள் கட்டும்போது, மேம்பாட்டுக்காக நாம் வழிவிட வேண்டியுள்ளது. ஆனால் நமது இழப்புக்காக சரியான தொகை வழங்கப்பட வேண்டும். நாம் ஏமாறக் கூடாது.
“நாட்டை மேம்படுத்துங்கள், ஆனால் எனது நிலத்தை தொடாதீர்கள்,” என்று நீங்கள் வாதிட்டால், அப்போது மேம்பாடுகள் இருக்காது. காரணம், பெரும்பாலும் ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்ட பகுதிகளில்தான் மேம்பாடுகள் இருக்கும். யாருக்கும் சொந்தமில்லாத, ஒதுக்கப்பட்ட அடர்ந்த காட்டுப் பகுதிகளில் அல்ல.
கம்போங் புவா மக்கள், தங்களது நிலத்தை இழந்த முதல் மக்கள் அல்ல - இறுதியானவர்களும் அல்ல. பினாங்கு நெரில்மிகுந்த ஒரு மாநிலம். பெரும்பாலான நிலங்களும் இனியும் அரசாங்கத்துக்குச் சொந்தமானதல்ல. பினாங்கை தொடர்ந்து மேம்படுத்துவது என்பது, தனியார் நிலத்தை அது பாதிக்கும் என பொருள்படும். ஆக, பினாங்கு அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்? எல்லா மேம்பாட்டுப் பணிகளையும் நிறுத்த வேண்டுமா?
நன்றி: தி மலேசியா டுடே - raja petra

Thursday, September 17, 2009
மனிதன் உணர்வில்லாமல் இருப்பது நல்லதல்ல.
மனிதன் உணர்வற்றவனாகவும் , அறியாமை மிக்கவனாகவும் இருப்பது நல்லதல்ல. உணர்வற்ற மனிதனால் தனக்கும் மற்றவர்க்கும் துன்பமே விளையும்; அரசியலிலும் குடும்பத்திலும் தனிமனித வாழ்கையிலும் பெரும் மன உளைச்சலையும் நிர்வாக சீர்குளைவையும் உண்டாக்கும்.
உணர்வற்றவர்கள் அதிகபட்சமாக கொலை செய்வார்கள்; பிறரைச் சுடு சொற்களால் துக்கப்படுதுவார்கள்; ஒருவரின் வாழ்க்கை ஆதாரத்தையே ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார்கள். இவர்கள் தங்களின் அறியாமையினாலே பிறருக்கு எப்போதும் அவமானத்தையும் துன்பத்தையும் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள்.
ஒரு சம்பவம், ஒரு பொருள் , ஒரு காட்சி உங்களுக்குள் உணர்வினை எழுப்பவில்லை என்றல் உங்களுக்கு உணரும் ஆற்றல் இல்லை என்று பொருள் . உங்களால் உணரமுடிந்து நல்லுணர்வை வளர்த்துக்கொண்டால் நீங்கள் நல்லவராகவும் கெட்ட உணர்வினை வளர்த்துக்கொண்டால் கெட்டவர்களாகவும் இருப்பீர்கள்.
அடித்தால் வலிக்கிறதே...! நாம் பிறரை அடிக்கிறோமே ... அவர்களுக்கும் வலிக்குமே ... அவர்களும் துன்புறுவார்களே ... எனும் உணர்வு மேலோங்கி இருந்தால் ஓர் உயிரையும் துன்புறுத்தலாகாது எனும் உணர்வு மேலோங்கி வளரும் . அது உயர்ந்தோரின் பண்புமாகும்.
ஒருவரின் செயலைப் பற்றியோ ஒன்றைப் பற்றியோ புரிந்துகொள்வதில் தவறு ஏற்படின் அது தவறான புரிந்துணர்வாகும். இந்தத் தவறான புரிந்துணர்வின் காரணமாக முன்னெடுக்கப்படும் செயல்பாடுகளால் நாம் பிறருக்குத் துன்பம் விளைவிக்கிறோம் . ஆக , நன்மை செய்தால் நன்மையும் தீமை செய்தால் தீமையும் விளையும் எனும் உணர்வு எப்போதும் நமக்கு இருக்கவேண்டும் .
நல்லுனர்வுகளால் பண்படாதவன் முரடனாகவும் காட்டுமிராண்டியாகவும் இருக்கிறான். இவனுடைய செயல்பாடுகளால் பிறருக்கு ஏற்படும் துன்பத்தைக்கூட உணரமுடியாதவனாக இருப்பான். உணர்வுகளை உரசிப்பார்க்கும் திறனோ பக்குவமோ இல்லாது இருப்பான். இதனால்தான் சிறு பிள்ளையாக இருக்கும்போதே நல்லுணர்வுகளால் வளர்க்கப்படவும் பழக்கப்படவும் வேண்டும் என்று நமது நீதி நூல்கள் வலியுறுத்துகின்றன .
யூதர்கள் பழமையான அறிவுக்கொவ்வாத சடங்காசாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து கடவுள் சித்தத்திற்கு புறம்பாக வாழ்ந்துகொண்டிருந்த பொது அதை கண்டித்த ஏசுவின் அன்பையும் இரக்கத்தையும் உணரமுடியாத யூதர்கள் கொடூரமாக துன்பப்படுத்தி அவரைக் கொலை செய்தனர். மத வெறியும் பணவெறியும் ஆடம்பரவெறியும் யூதர்களை உணர்வற்றவகளாக்கியது; அவர்களின் உணர்வுகளை சாகடித்துவிட்டது. ஏசுவின் வாக்கின்படி அவர்கள் ஆவியில் மரித்தவர்களாக இருந்தனர்.
உடலில் உயிர் இருந்தால்மட்டும் போதாது. உணர்வுகளால் வளம்பெற்று இருக்கவேண்டும்; மேம்பாடு அடைந்த்திருக்கவேண்டும். நல்லுணர்வுகளால் மேம்படுத்தப்பட்ட ஓர் உயிரைத்தான் நவீன உலகம் மனிதராக ஏற்றுக்கொள்ளும்; நாகரிகம் மனிதனென்று சொல்லும்.
தாயின், சகோதரர்களின், சமூகத்தவரின் அன்பைப் புரிந்துகொள்ள முடியாதவரை; உணரமுடியாதவரை எப்படி உணர்வுள்ளவர் என்று சொல்லமுடியும்? ஓர் அரசு செய்யும் நல்லச் செயலைக்கூட உணர்ந்து மதிக்கத்தெரியாத மனிதனை எப்படி நல்ல பிரஜையென்று ஒப்புக்கொள்ளமுடியும்?
மனிதனாகப் பிறந்தும் உணர்வற்று இருப்பவர்களை ஆவியிலே ஜீவனில்லாதவர்கள், மரித்தவர்கள் , நடைபிணங்கள் என்று உணரமுடிந்ததினால்தான் தன்னைக் கொடூரமான முறையில் கொலைசெய்தவர்களை , " பிதாவே... இவர்கள் அறியாமல் செய்யும் பாவத்தை மன்னியும்..." என்று யேசுவால் வேண்டிக்கொள்ள முடிந்தது; அவர்களை மன்னிக்கவும் முடிந்தது.
நல்லுணர்வுகளால் தங்களை மேம்படுத்திக்கொண்டு தங்களுடைய மனதையும் செயலையும் காத்துக்கொள்ளும் மனிதர்கள் உயர்ந்த வாழ்க்கைக்கு உரியவர்களாகிறார்கள்.
சாதிய உணர்வு, மத உணர்வு, மொழியுணர்வு, சமூக உணர்வு, இயக்க உணர்வு , நாட்டுணர்வு என்று பல உணர்வுகளின் தாக்கத்திற்கு மனிதர்கள் ஒவ்வொரு நாளும் ஆளாகக்கூடும். இப்படிப்பட்ட சூழலில் எந்த உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுப்பது எனும் ஞானம் ஒவ்வொருவருக்கும் வேண்டும்.
சாதிய உணர்வு இந்தியர்களிடையே அதிகமாக இருக்கிறது. இந்த சாதி உணர்வினால் நமக்கு நன்மையா? தீமையா ? என்று பகுத்தாயும் உணர்வு இல்லாத காரணத்தினால்தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாம் நாடிழந்தோம், நகரிழந்தோம், பேர் இழந்தோம் , புகழ் இழந்தோம்.
உணர்வற்றவர்களின் ஆதாயத்திற்காக வலிவிழக்கவும், மானத்தை இழக்கவும் நேர்ந்தது. இவர்களுக்காக சாதிய உணர்வு வளர்க்கப்பட்டு நம்மினம் கூறுபோடப் பட்டது. " தமிழினம் எப்படிப்போனால் என்ன ... சிதறுண்டு சினாப்பினமானாலென்ன...
எனக்கு என் சாதிதான் முக்கியம்" என்று இருப்பவர்களை என்னவென்பது?
உலகத்தைப் பாருங்கள்... மற்ற இன மக்களைப் பாருங்கள் ... அவர்களின் மேன்மையைப் பாருங்கள்... இறுதியாக நம்முடைய சாதி உணர்வையும் சீர்தூக்கிப் பாருங்கள்...! ஒட்டு மொத்த தமிழினத்திற்கு சாதியுணர்வு சரி பட்டுவருமா? என்று யோசித்துப் பாருங்கள்! சரிபடவில்லைஎன்றால் கைவிடுங்கள்..!
மத உணர்வு எப்படி? அன்பை அடிப்படையாகக் கொள்ளாத எந்த மதத்தையும் ஒதுக்கித் தள்ளுங்கள் ...அன்பின் சாயல் படராத பல ஏற்பாடுகள் மதங்களில் காண்கிறோம். மத உணர்வு மனிதனைப் பிளவுபடுத்த அல்ல என்பதை எப்போதுமே மனதில் இருத்துங்கள்...!
மொழியுணர்வு தேவைதான? மொழி உண்மையிலேயே போற்றப்படல் வேண்டுமா? மொழியுணர்வு இல்லா இனம் அழிந்துவிடுமா? சிந்தித்துப் பாருங்கள்...
உலக மொழி என்றும் தேசமொழி என்றும் தாய்மொழி என்றும் இன்று உலக அரசியல் மனிதர்களை ஆட்டிப்படைக்கிறது. தொடர்பு மொழியாகவும் உலகமொழி யாகவும் ஆங்கிலத்தை வைத்துக்கொண்டு ஒவ்வொருவருக்கும் தாய்மொழியைப் படிக்கும் வாய்ப்பை வழங்கினால் என்ன?
ஒருவன் தன்னுடைய தாய்மொழியை விட்டுக்கொடுத்துவிட்டு தேசியத்தில் ஒன்றுபடவேண்டும் என்பது நியாயமா? என் தாய்மொழியில் என்னுடைய கலை, கலாச்சாரம் , பண்பாட்டுக்கூறுகள் என்று எல்லாம் இருக்க நான் என்னுடைய தாய்மொழியை இழக்க சம்மதித்தால் நான் என் முகவரியை இழந்துவிடமாட்டேனா? என் இனம் அழிந்துவிடுமே? எப்படி சம்மதிப்பேன் என்று வீறுகொண்ட உணர்வு பெருக்கெடுக்க நான் உணர்வுள்ளவனாக இருப்பது அவசியம்மல்லவா?
உணர்விலாதவர்கள் எதை இழக்கவும் சம்மதிப்பார்கள். மொழி போனால் என்ன? உரிமை இழந்தால் என்ன ? எதைக்கொடுத்தல் என்ன? கொடுக்காவிட்டால் என்ன? உணர்விழந்து கிடப்பார்கள்...! இப்படிப்பட்டவர்களின் செயலை வருங்கால சந்ததிகள் சபிப்பார்கள் என்பதுமட்டும் நிச்சயம்...!
இரா- ஜெகவீரப்பாண்டியன்.

ஒருவர் உணர்வற்றவராக இருந்தால் அவருக்கு நல்லுணர்வு வளராது. நல்லதையும் கெட்டதையும் பகுத்துணர முடியாதவராக இருப்பார் . இதைச் செய்தால், இதைச் சொன்னால் இது நடக்கும் எனும் எதிர் விளைவுகளைப் பற்றிய ஞானம் இல்லாது இருப்பர்.

Wednesday, September 9, 2009
தாய்மொழியின் முக்கியத்துவம்.
எங்களின் சமகால மனிதர்கள் மிகவும் மோசமானவர்கள். இவர்களுக்கு இனவெறி மொழிவெறி ,சாதிவெறி மற்றும் மதவெறி உச்சந்தலையிலிருந்து உள்ளங்க்கால்வரைப் பிடித்து ஆட்டுகிறது.
ஒவ்வொருவருக்கும் அவர்களது தாய்மொழி மிகவும் முக்கியமானது. அதற்காக ஒருவன் தாய்மொழியை அடுத்தவர்மீது திணிப்பது எந்தவகை ஜனநாயகம் என்பதுதெரியவில்லை. இது எந்தவகை மனித உரிமையென்றும் தெரியவில்லை?
மொழித் திணிப்புப் போதாதென்று சில நாடுகளில் சிறுபான்மையோர் மீது கலாச்சாரத்திணிப்பையும் மேற்கொள்கின்றனர் . கலாச்சாரத் திணிப்பை ஏற்படுத்துவதன்வழி சிறுபான்மையோரை நாட்டைவிட்டு விரட்டுகின்றனர் அலது இவர்களது கலாசாரத்தை ஏற்றுக்கொளும்படி கட்டாயப் படுத்துகின்றனர். இது எந்தவகை ஜனநாயகம்?
கல்வியைப் பொறுத்தவரை பொதுவான ஒருமொழியை உலக அளவில் வைத்துக்கொண்டு , மற்ற காரியங்களுக்கு அவரவர் தங்களின் தாய்மொழிக்கு முன்னுரிமை கொடுத்து பயிலலாம். அவரவர் தங்களின் இனத்தவரோடு உரையாட இலக்கியத்தைப் படைக்க தங்களின் தாய்மொழியைப் பயன்படுத்திக்கொள்ள இயலும். ஆனால் அப்படியெல்லாம் விட்டுக்கொடுக்க மாட்டார்கள் இந்த மொழி வெறியர்கள்.
மொழியின் முதல் தேவையே தொடர்புக்காகத்தான். அந்தத் தொடபுமொழி உலகத்திற்கே பொதுவாக ஒருமொழியாக இருந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும். இதைவிடுத்து நாட்டுக்கு ஒரு அதிகார மொழியைக் கட்டாயப்படுத்தி கற்கச் செய்து மற்றவர் வளர்ச்சியைத் தடுத்திடும் முட்டாள்தனத்தை என்னவென்று சொல்வது ?
ஒரு மொழி ஓர் இனத்தின் ஜீவன் என்றால், ஜீவனை இழந்த உடல் அழுகி நாற்றமெடுத்து அழிந்துப் போவதைப்போல மொழியை இழந்த இனமும் அழிந்துதான் போகும். ஓர் இனம் இந்த பூமியில் அழியாமல் இருக்கவேண்டுமென்றால் அந்த இனத்தின் மொழி பேணப்படல் வேண்டும்.
பல்லின மக்கள் வாழும் நாட்டில் அறிவுக்கும் காலத்திற்கும் ஒவ்வாத சட்டங்களை வைத்துக்கொண்டு பாம்பாட்டிக் காரனைப்போல் விளையாட்டுக் காட்டுகிறார்கள் . கேட்டால் மக்களைப் பாதுகாக்க மொழிவெறி சட்டங்கள் தேவை என்பதுபோல் நடந்து கொள்கிறார்கள். காட்டு மிராண்டித்தன மனப்போகிற்கு ஆட்சியாள நினைக்கும் சுயநலவாதிகளை என்னவென்று சொல்வது?
பல்லின மக்கள் வாழும் நாட்டில் மற்றவர்களின் தாய்மொழியில் தொடர்பு கொள்ள இயலாதவாறு தடுப்பது மொழியழிப்பு வேலையில்லையா? இது ஒரு பிரஜையின் சுதந்திரத்தை பறிப்பதாகாதா? ஒருவன் தன் தாய்மொழியில் அரசாங்கத்தோடு தொடர்புகொள்ள முடியவில்லையென்றால் அவன் உரிமையுள்ள மனிதனா?
பெரும்பான்மையோரோ அல்லது சிறுபான்மையோரோ முழு சுதந்திரத்தோடு வாழ்வதுதான் உரிமை வாழ்வாகும்; நீதியாகும். அந்தக் குறிக்கோள் வெற்றியடைய மக்களினத்தைக் கொண்டுசெல்லும் கல்விமுறையும் சட்டங்களும் இயற்றப்படல் வேண்டும் . அதைவிடுத்து இனவெறி மொழிவெறி மற்றும் மத வெறியைத் தூண்டிவிடுக்கொண்டு ஆட்சி செய்ய நினைக்கும் நாடு உயரிய இலக்கை வேகமாக எட்டிவிட இயலாது.

Subscribe to:
Posts (Atom)