சாமிவேலு இல்லாத ம.இ.கா உடையும்”; கணவாய் ஆருடம்
- Saturday, October 9, 2010, 0:13
- வாசகர் கருத்துகள்" rel="category">வாசகர் கருத்துகள்
- 595 views
- 4 comments
மலேசிய வரலாற்றில் மிகவும் சுவையான அனுபவம் பெற்ற பெயர் சாமிவேலு. நகைச்சுவையும், புன்னகையும், கோபமும், ஆத்திரமும், அடாவாடித்தனமும், ஆணவமும் அதிகாராமும் கொண்டு, மலேசிய மக்கள் மட்டுமல்லாமல் உலகத்தமிழர்களின் கவனத்தையும் ஈர்ததவர் இவர்.
இவருக்கு இரண்டு மனைவிகள்; பயரங்கர லஞ்சம், பலே கில்லாடி. இந்தியர்களின் தாழ்மைக்கு இவரே காரணம் என தூற்றும் கூட்டத்தினரிடையே நிமிர்ந்த தலையோடு பவணி வந்த இவரை ம.இ.காவினர் அடுத்த ஆண்டு வரை தலைவராக இருக்கவேண்டும் என்ற அங்கீகாரத்தை கொடுத்திருப்பினும், அடுத்த வருடம் சனவரியில் விலகுவதாக அறிவித்துள்ளார்.
இவர் இல்லாத ம.இ.கா என்னவாகும்?
உலக காற்பந்து போட்டியின் முடிவை கணித்த கணவாய் (இன்றும் உயிருடன் உள்ளது) இதற்கான பதிலாக உடையும் என்ற பெட்டியில் உள்ள தீணியை திண்கிறது. அப்படி இல்லாவிட்டால், அப்படி ஒரு பெட்டியை வைத்தால் தின்னும் என்பது திண்ணம்.
தேர்தலில் தோல்வியடைந்த பிறகு தனது உண்மை மதீப்பீட்டை உணரத்தவறியதால் வண்மையான நச்சரிப்புக்கு ஆளாக்கப்பட்டார்.
தேர்தல் காலங்களின் போது ம.இ.காவின் வேட்பாளர்களை தானே தேர்வு செய்யும் நிலையிலிருந்து சாமிவேலு தற்போது அப்பணியை அம்னோ செய்வதை ஜீரணிக்க இயலாத நிலையில் உள்ளார். அமைச்சரவையில், ஒரு சிறப்பான பொதுப்பணித்துறையில் மூத்த அமைச்சராக இருந்து அதை தட்டிக்காத்து, அதன்வழி மருத்துவக்கல்லூரி, டெப் கல்லூரி போன்றவைகளுக்கு பாதை போட்டவர்.
அவரைப்பற்றிய நகைச்சுவைகளும் பல உண்டு; நெடுஞ்சாலைப் பாலங்கள் பழுதடைந்த போது அவரை பதவி விலகக்கோரியவர்களை சாடினார். தொலைக்காட்சி பேட்டியில் பாலம் அமைக்க எல்லா குத்தகைகளும் பூமிபுத்திராக்களுக்கு வழங்கப்பட்டது என்றும் அதற்கு கேள்வி கேட்பவர்களே பதிலை கொடுக்க வேண்டும் என்று அம்னோவை சாடினார்.
ம.இ.காவை ஒரு இரும்புப்பிடிக்குள் வைத்து பாதுகாத்து வளர்த்தவர் சாமிவேலு. அதில் உருப்படியான தலைமைத்துவம் உருவாக வாய்ப்பில்லை அல்லது திறமையானவர் ம.இ.காவில் மாற்றுக்கருத்துடன் நடமாட வேண்டுமானால் அவருக்கு அடிபணிந்துதான் போக வேண்டும். ஆதரவாளர்கள் என்ற போர்வையில் பல நிலைகளில் அவருக்கு அருகாமையில் உள்ளவர்களுக்கு திறமை இருந்தாலும், அதில் தர்மம், நீதி, தியாகம், மானம். மரியாதை இருப்பது அரிதாகும். “ஆமாம் சாமி” மட்டுமே போட்டு வருபவர்களிடம் எவ்வகை துணிவை காணஇயலும்.
சாமிவேலுக்கு பிறகு ம.இ.கா முற்றான பிளவுகளை எதிர்நோக்கும் என்பதை அரசியல் கண்ணோட்டம் கொண்டவர்கள் ஏற்றுக்கொள்வர். அப்படி பிளவுபடுவதால் அது ம.இ.காவுக்கு பலவீனம் என்று பொருள் கொள்ளஇயலாது. அதன் முக்கியத்துவமே இந்த பிளவுக்கான காரணமாகும்.
இந்தியர்களை ஒற்றுமைப்படுத்திய வரலாறு ம.இ.காவுக்கு சொந்தமானது. அதை பிளவு படுத்திய பாவமும் அதையே சாரும்.
ஐயன், தலைநகர்
………….be still in building our community and hopefully there is no more selfish indian leaders that will lead us in future………this is samyvelu harvest period for what he had sow to his community………let the people knows good and bad deeds of the leaders bthat leads us today….so dont give up revealing the facts and truth so rthat our community will be updated on the leaders act of “”"”service for the people”"”"”"……..
talaivargal palar maaralam; aanal naam talaiyelutthai matrakudiyan taan unmaiyaana talaivan! we still waiting to see who can be done that…
இனி சாமிவேலு தொடர்ந்து இருந்தாலும் ம இ கா உடையும்.
முரடனை அடக்க ஒரு முரடன்தான் தேவை . நல்லவர்களை வழிநடத்த ஒரு நல்லவந்தான் தேவை. அடாவடிப் பேர்வழிகள் நிரம்பிய அரசியல் உலகத்திற்கு சாமிவேலூதான் சரியான ஆளு . அது இப்போ தெரியாது .போகப்போகத் தெரியும் . தயவுசெய்து இந்த வார்த்தைகளைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். சாமிவேலு இல்லாத மலேசியா அரசியலை நமது பேராசைபிடித்த இந்தியப் புது இளந்தலைவர்கள் எப்படியெல்லாம் சந்தைச் சிரிக்கச் செய்யப்போகிறார்கள் என்பதை…