Friday, September 19, 2014

நான் இந்து மத எதிரியல்லன். ஆனால் இந்து மதம்தான் எனக்கு எதிராக இருக்கிறது.

நான் இந்து மத எதிரியா? இல்லை!  ஆனால்  இந்து மதம் தமிழினத்தின் மதமாக இருக்கும் வரை தமிழர்களை அம்மத கோட்பாடுகள் முன்னேற்ற முடியாமல்  தடுத்துவிடும். ஏன் அப்படி? சாதியம் இந்து மத கோட்பாடக உள்ளது. சாதியம் இருப்பதால் உயர் சாதிக்காரின் அடிமையாகத்தான் மற்றவர்கள் நடத்தப்படுவார்கள். கல்வி, வேலைவாய்ப்பு, வியாபாரம் எல்லாம் உயர் வகுப்பாரின் கட்டுப்பாட்டிற்குள் தானாகவே வந்துவிடுகின்றன. அரசு அதிகாரங்கள் பணக்கார உயர்வாகுப்பாளர்களிடம் போய்விடுகின்றன. ஆகவே தமிழினம் சமுதாய விடுதலையைப் பெற முடியாத படி இந்து மத பார்ப்பனியம் தடையாக இருக்கிறது. இந்த இடர்பாடுகளை புரிந்து கொள்ளும் நிலையில் ஹிந்துத் தமிழன் இல்லன்.

     இதனால்தான் இ.வெ.ரா. பெரியாரால்  இந்து மத த்தையும் , அதன் மூட நம்பிக்கைகளையும், கோட்பாடுகளையும் கடைசிவரை ஏற்றுக்கொள்ள இயலாமல் போனது. தமிழர்களால் பெரியாரின் தொண்டை என்று புரிந்துகொள்ள முடிகிறதோ அன்றுதான் விடிவு!

    - கடலின் மகன். ( தமிழன்)

தமிழினம் உண்மையிலேயே உருப்பட வேண்டுமா?


பார்ப்பனியத்தைப் போற்றும் பார்ப்பான் இருக்கும்வரை பார்ப்பனியம் இருக்கும்.
பார்ப்பனியம் இருக்கும்வரை சாதியம் இருக்கும்.
சாதியம் இருக்கும்வரை  சாதிய ஆரியத்தமிழன் இருப்பான்.
சாதிய ஆரியத்தமிழன் இருக்கும்வரை இந்துத் தமிழன் இருப்பான்.
இந்துத் தமிழன் இருக்கும்வரை சுயமரியாதையுள்ள தன்மானத் தமிழன் இருக்கமாட்டான்.
தன்மானம் இல்லாத தமிழன் இருக்கும்வரை….
தமிழனிடை ஒற்றுமை என்பது சுட்டுப்போட்டாலும் வராது.
தமிழரிடை ஒற்றுமை இல்லாதவரை  தமிழினத்தால் எதையும் சாதிக்கவே முடியாது.
தமிழினத்திற்குச் சாதனை இல்லாதவரை…
தமிழினம் சீரழிந்து, சின்னாப்பின்னமாகி நாசத்தைச் சந்திப்பதை
எவராலும் , எந்தக் கொம்பனாலும் தடுக்கவே முடியாது.
இதைத்தான் எங்கள் வெண்தாடி வேந்தன்  சாகும்வரைப் பாடாய் பாடினான்…
இறுதி மூச்சுவரை  எடுத்தெடுத்துச் சொன்னான்…
ஆனால்…
எந்தத் தமிழன் கேட்டான்?
நான் இங்கே சவாலாகச் சொல்கிறேன்…
சாதியை ஒழிக்காமல் உண்மை தமிழனை உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது. 
உண்மை தமிழன் இல்லாமல்…
உண்மையான
இனவழி தமிழ்நாடும் இல்லை…
இனவழி தமிழ் ஈழமும் இல்லை…
வேண்டுமானால்…
ஆரியத்தமிழ் ஈழம் சாத்தியம்.
ஏற்கனவே … எப்போதோ… ஆரியத்தமிழ் நாடு சாத்தியமாகி வேர்விட்டு விழுதுகள் பரப்பி ஓங்கி வளர்ந்துவிட்டது. 

இந்த வாசகங்களின் ஆழத்தைப் புரிந்து முன்னேற ஆரியத் தமிழனுக்கு பல யுகங்கள் தேவைப்படலாம். அதுவரை எல்லாம் கனவுகளே!

Thursday, September 18, 2014

காயின் கருத்துகள் அர்த்தமற்றவை – தமிழன்

Periyaar
திராவிடன் சரியாகச் சொன்னார். சகோதரி சொன்னாள்… சாமியார் சொன்னான் என்றெல்லாம் படித்துவிட்டு உண்மை அறியாமல் புலம்பும் உன்னை என்னவென்பது? உமது இனத்தை எவரும் ஆதாரமில்லாமல் தாக்கவில்லை. உமது இனம் எவ்வளவு துன்பத்தை எம்மினத்தவனுக்குக் கொடுத்திருக்கிறது என்பதைப் பெரியார் சொல்லித்தான் நாங்கள் அறிந்துகொள்ளும் காலத்தில் நாங்கள் இல்லை. பெரியார் பேசி எழுதிய காலம் தமிழர்கள் பெரும்பாலோர் படிக்காத காலம்.

அடுத்து நான் இந்தப் பகுதியில் உம்மைப்போன்று பெரியார்மீது காழ்ப்புணர்வு கொண்ட ஒரு நபரைப் பார்த்ததில்லை. எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் பெரியாரை அதில் அறிவே இல்லாமல் இணைத்து , அதன்மூலமாகப் பெரியாரைச் சாடும் உமது சைகோ குணத்தைக் காண்கிறேன். இப்படிச் செய்வதன் மூலம் உமது  ஆழ்மனதை சொறிந்துகொண்டு அமைதியடைகிறீர். இப்படி ஒரு மனநோயாளியாக இருக்கும் நீங்கள் உங்களுடையப் பழையப் பதிவுகளை ஒருதரம் திரும்பிப் பாருங்கள். அப்போது நான் சொல்லும் உன்மையின் ஆழம் புரியும்.
தமிழர்கள் அறிந்துகொள்ள முடியாதவகையில் தமிழர்களை அந்நிய கலாச்சாரத்திற்கு ஆட்படுத்தி, அவர்களின் சிந்தையைக் கெடுத்து , தமிழர்களை ஜாதிவாரியாகப் பிரித்து பிறப்புப் பத்திரத்தில் ஜாதியைப் பதிவுபெற வைத்த கயவனைப் (பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்) பற்றி எழுதினால் சிலருக்குக் கோபம் வருவது அநியாயம் என்று அங்கலாய்க்கிறீர். அத்தோடு , உலகில் எங்கு போனாலும் தமிழர்களின் ஜாதி முகவரியால் அவதிப்படுகிறார்களாம். இது காயீயின் மன உழைச்சலுக்கு காரணமாம். இந்தச் சமூகக் காவலனுக்குத் (காயீ) தமிழன் மீது அவ்வளவு பாசம்; அவ்வளவு அக்கறை.

இவ்வளவு மன எரிச்சலை, குரோதத்தைப் பெரியார்மீது காட்டும் தமிழர்களின் காவலனே.. காயீ… உன்னைக் கேட்கிறேன்…உமது ஆரிய வேதங்களிலும், இதிகாசங்களிலும், மனுநீதியிலும் , ஜாதியை வர்ணம் எனும் சாயலில் தமிழன் உட்பட எல்லா திராவிட இனத்தவனின் வாழ்க்கையில் மதக் கொள்கை எனும் பெயரில் , கடவுளின் நீதி எனும் பெயரில் புகுத்தி , சமூக நீதியைக் கெடுத்து திராவிட இனத்தையே கூறுபோட்டு சீரழித்தவனிடம் கோபமே வரவில்லையே அது ஏன்? உம்மினத்தவன் எங்களினத்தவனை சீரழித்தச் செயலென்றால் அதைப்பற்றி வாய்கிழியப் பேச வார்த்தை வராதோ!!!? ஆரியனினின் இந்த அயோக்கியத் தனத்தைப் படிக்காத தமிழனிடம் படம்பிடித்துக் காட்டினால் பெரியாரை உனக்குப் பிடிக்காது.
உன் இனத்தானுக்குப் பெரியாரைப் புகழ்ந்தாலே எரிச்சலாக வரும். ஏன்? உம்மினத்தவனின் எல்லா தில்லாலங்கடி வேலைகளையெல்லாம் வெட்டவெளிச்சமாக்காமல் பெரியாரும் ஓர் ஆரிய அடிவருடியாக இருந்திருந்தால்  உங்கள் ஏடுகள், தொலைக்காட்சி,வானொலி எல்லாம் அவரைத் தூக்கோதூக்கென்று தூக்கும். நீயும் பெரியார் புகழ்பாடி இருப்பாய் அப்படித்தானே காயீ?
காயீக்காக நான் இதைப் பதிவிடாவிட்டாலும் என் தமிழினத்தான் புரிந்துகொள்ள பதிவிடுகிறேன். தமிழ் நாட்டில் சாதி எனும் சதிச்செயலால் தமிழனினம் பிரிவுகளுக்கு உட்பட்டு  சின்னாப்பின்னமாகிக் கிடந்த சூழலில் , சேரித்தமிழன், பிற்படுத்தப்பட்டத் தமிழன், ஒதுக்கப்பட்டத் தமிழன், தாழ்த்தப்பட்டத் தமிழன் எல்லோரும் சமூக நீதி கிடைக்காமல் கல்வி இல்லாமலும், பொருளாதார அறிவின்றி ஏழையாகவும் இருந்தனர்.
தமிழரிடையே கல்வி,பொருளாதார சமத்துவமின்மை கணப்பட்டது. உயர்சாதியினர் என்று சொல்லிக்கொண்டு எல்லா கல்வி, பொருளாதார வாய்ப்புகளை , தமிழ்நாட்டின்- இந்தியாவின் ஆட்சி அதிகாரங்கள் யாவும் பார்பணர்களே தங்களின் கைகளில் வைத்துக்கோண்டு மற்றவர்களை அடக்கி ஆண்டனர். இப்படிப்பட் சூழலில் தான்  பெரியார் பச்சைத் தமிழன் காமராசருக்கு ஆதரவுதந்து தமிழ் நாட்டின் முதலமைச்சராக்கி தமிழினத்திற்குக் கல்விக் கண்ணைத் திறக்க உதவினார். தமிழினத்திற்கு நல்ல காலம் உதயமானது.
அதன்பிறகு வந்த அறிஞர் அண்ணாவின் ஆட்சி  தமிழினத்தில் சமத்துவம் மலர கீழ் நிலையில் இருந்த தமிழர்களைக் கல்வியிலும் பொருளாதாரத்திலும் வேலைவாய்ப்பிலும் பயனடைய சாதிய அடிப்படையில் சிறப்புச்சலுகை அடிப்படையில் உதவ முற்பட்டனர். இருந்தாலும் தாழ்த்தப்பட்டவர்,
ஒதுக்கப்பட்டவர்,பிற்படுத்தப்பட்வர் எனும் பெயரில்தாம் உதவினர். சாதியை வைத்துத்தான் அவர்களின் நிலையை உறுதி செய்யும் துர்பாக்கிய நிலை அவர்களுக்கு ஏற்பட அண்ணாதுரையின் ஆட்சியாளர்களோ அல்லது தந்தை பெரியாரோ காரணமல்ல என்பதை ஆரியனின் மத சூழ்ச்சியே காரணம் என்பதை புரிந்துகொள்ளும் தமிழர்களால் உணரமுடியும்.
பெரியாரோ அல்லது பேரறிஞரின் வாரிசுகளோ சாதியைக் கண்டுபிடிக்கவுமில்லை; சாதியை உண்டாக்கவுமில்லை. மாறாக பார்ப்பணியம் விதைத்த கொடுமைக்கு சாவுமணியடிக்கவே வந்தனர். தமிழ் சமூகத்தின்மேல் பூசப்பட்ட அழுக்கை சுத்தம் செய்ய முற்பட்ட  தமிழினத் தலைவன் பேரறிஞர் அண்ணாவின் பொடிபோடும் பழக்கத்தை கேவலமாகச் சித்தரிக்க இந்தப் இப்பகுதியில் பல தடவை போதைப்பிரியன் எனும் அடைமொழியில் அண்ணாதுரையைக் கேவலமாகப் பதிவிட்டுள்ளான் ஒருவன்.
இதே பகுதியில் செம்பருத்தியில் தொடர்ந்து பெரியார் தமிழினத்திற்குச் செய்த நல்லதை மறைத்து வெங்கட் ராமசாமி நாயக்கன் கயவன் என வாய்கூசாமல் ஒரு பச்சைத்தமிழனின் ஊடகத்திலேயே பெரியாரைத் தாக்கி எழுதும் கொடுமையைத் தமிழர்களாகிய நாம் பார்க்கும் துர்பாக்கியம் ஏற்படுகிறதென்றால் இதைவிடக் கொடுமை என்ன உள்ளது.
இங்கே நாம் பதிவு செய்யும் பெரியாரின் நியாயத்தை ஒரு பார்பணனின் ஊடகத்தில் பதிவிட்டுவிட இயலாது. விமர்சனம் செய்ய யாருக்கும் உரிமை உண்டு. ஆனால் தமிழறிவும் இன்றி, பொது அறிவும் இன்றி எழுத்துப் பிழையுடன் கருத்திட வருவது நியாயமா என கேட்கிறேன்?
பாருங்கள் காயீன் எழுத்தறிவை….நாழிதலில் ,உபயோகில்லை, சிலறுக்கு, கோபம் தொத்துண்டு வருது, நீறும் நாய் கண்ணோ, அரியாது, பிறப்புப்பத்திரம் வறை.   ஆறே வரிகளில் உள்ள காயீயின் பதிவில் காணப்படும் எழுத்துப் பிழைகள். தமிழே ஒழுங்காக எழுதத் தெரியாத காயீ கருத்திட வெட்கப்பட வேண்டும். கருத்துப் பிழை, எழுத்துப் பிழை இரண்டும்தான் காயீன் அடையாளமோ?

Tuesday, January 18, 2011

திட்டமிட்ட இன இழிவு!

தென்னிந்தியர்களைப் பறையா என்று குறிப்பிடும் வாசகத்தைக் கொண்ட ஒரு நூலை ஐந்தாம் படிவ மாணவர்களுக்குப் பாட நூலாக வைத்திருப்பது தென்னிந்தியர்களைத் திட்டமிட்டு இழிவுபடுத்தும் செயல் அன்றி வேறு இல்லை. (- முனைவர் ஆறு. நாகப்பன்)

மேலும், மனித உணர்வையும் நாகரீகத்தையும் நயம்படக் கூறுவதே இலக்கியத்தின் நோக்கம். குறிப்பிட்ட ஓர் இனத்தை இழிவுபடுத்தும் நோக்கத்தில் இலக்கியத்தைப் பயன்படுத்துவதும் இப்படிப்பட்ட கீழ்த்தரமான இலக்கியப் பகுதிகளைத் தேர்வுக்காக மாணவர்கள் படிக்கும் கட்டாயத்தை ஏற்படுத்துவதும் கல்வி உலகின் நாகரீகமல்ல.

ஐந்தாம் படிவ மலாய் இலக்கியப் பாடத்திற்கு வைக்கப்பட்டிருக்கும் இண்டர்லோக் என்னும் இப்பாட நூலில் மலேசியாவுக்குத் தென்னிந்தியர் வருகை பற்றிய வரலாற்றுப் பின்னணியிலான குறுநாவல் ஒன்று உள்ளது. இக்கதையின் தலைவன் பறையா என்னும் சாதிப்பிரிவைச் சேர்ந்தவன் என்று அறிமுகப்படுத்தப்படுகின்றான்.

கேரளாவிலிருந்து பல நகரங்களைக் கடந்து நாகப்பட்டினம் துறைமுகத்தில் கப்பலேறி பினங்கு துறைமுகத்திற்கு வருவதாகக் கதை. இப்படி வருகிறவர்களில் பலர் பறையர் என்பதால் அவர்கள் ஒருவரோடு ஒருவர் இடித்துக் கொண்டு வருவதற்குப் பயப்படவில்லை என்றும் கப்பலில் ஆடுகளைப் போல் இவர்கள் அடைக்கப்பட்டிருந்தனர் என்றும் இவர் எழுதியுள்ளார்.

மேலும் தென்னிந்தியாவில் இவர்கள் விலங்குகளை விட மோசமாக நடத்தப்பட்டனர் என்றும் படைப்பாளர் எழுதிச் செல்கிறார். தென்னிந்தியாவில் வேலை செய்வதற்கும் சாதிக் கட்டுப்பாடு உள்ளது. மலேசியாவில் சாதி வேறுபாடு இல்லாமல் வேலை செய்ய முடியும் என்றும் படைப்பாளர் எழுதியுள்ளார்.

எழுபத்தைந்து பக்கங்கள் கொண்ட இந்தக் குறுநாவலில் மணியம் என்ற கதைத் தலைவன் பறையனாக இருக்க வேண்டுமென்பதற்கான அவசியம் எதுவும் இருக்கவில்லை. அவனை ஒரு தென்னிந்தியன் என்று அறிமுகப்படுத்தியிருந்தாலே கதையில் எந்தப் பகுதிக்கும் ஊறு ஏற்படப் போவதில்லை. கதைப் போக்கைக் கருத்தில் கொண்டு பார்த்தால் தென்னிந்தியாவிலிருந்து வந்தவர்களைப் பறையர் என்று கூறியிருப்பது திட்டமிட்ட ஒரு இன இழிவாகவே தெரிகிறது.

இது முதல் தடவை அல்ல. இதற்கு முன்னும் பல பள்ளிப் பாட நூல்களில் ‘கஸ்டா பறையா’ என்ற தொடர் பல முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழர் வரலாறு, பண்பாடு, சமயம் பற்றி எப்போது எழுதப்பட்டாலும் மலாய் அறிஞர்களுக்கு ‘கஸ்டா பறையா’ என்ற ஒரு செய்தி மட்டுமே தெளிவாகக் கண்ணில் படுகிறது. இந்த அறிஞர்கள் அறிவார்ந்த ஆராய்ச்சியாளராய் இருப்பதைக் காட்டிலும் மலேசிய இந்தியர்களை வெறுத்து இழிவு செய்யும் இனவாதிகளாகவே தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றனர்.

இப்படிப் பள்ளிப் பாட நூல்களில் எழுதுவதன் நோக்கம் என்ன? இதனைப் படிக்கும் மலாய்க்கார மாணவர்கள் இந்திய மாணவர்களைக் கீழ்மக்களாகக் கண்ணோட்டமிட வேண்டும் என்பதும் இந்திய மாணவர்கள் தம்மைத் தாமே இழிந்தவர்களாகக் கருதும் தாழ்வு மனப்பான்மையுள்ளவர்களாக வளர வேண்டும் என்பதும்தான் இந்த எழுத்துகளின் நோக்கமாக இருக்க முடியும்.

இண்டர்லோக் என்னும் இந்தக் குறுநாவல் தொகுதியில் கெலுவார்க செமான், கெலுவார்க சிங் ஹுவட், கெலுவார்க மணியம், இண்டர்லோக் என்னும் நான்கு குறுநாவல்கள் அடங்கியுள்ளன. முதல் கதை இந்த நாட்டின் பூமிபுத்ராக்கள் வந்தவர்கள் வாழ்வதற்கு இடம் கொடுத்த நல்லவர்களாகக் காட்டப்பட்டுள்ளனர். சீனர்கள் அவர்கள் நாட்டில் ஏற்பட்ட வறுமையால் கப்பலேறி மலாயாவுக்கு வந்து மலாயாவின் வளத்தை எவ்வாறு பங்கிட்டுக் கொண்டனர் என்று காட்டியுள்ளனர். மூன்றாம் கதையில் வறுமை, சாதிக் கட்டமைப்பு ஆகியவற்றால் தென்னிந்தியர்கள் மலாயாவுக்கு வந்த கதையைக் கூறியுள்ளனர்.

இந்தியரும் சீனரும் மலாயாவுக்குப் பிழைக்க வந்தவர்கள் அல்லது வந்தேறிகள் என்ற கருத்தை மிகுந்த லாவகமாகப் படைப்பாளர் வலியுறுத்துகிறார். பிழைக்க வந்த இந்தியரும் சீனரும் இந்த நாட்டின் வளமைக்குக் கொடுத்த உயிர்க் கொடைகள் ஏராளம். இந்த உயிர்க் கொடைகளுக்குப் பின்னால் இருக்கும் கதைகள் ஆயிரம். இவற்றை எழுதாமல் மறைத்து இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் அவர்கள் பிழைக்க வந்த கதையையும் அவர்களின் சாதீயக் கட்டமைப்பையும் மிகுதியாக விவரிப்பது ஏன் என்பதுதான் நமது கேள்வி.

தேசிய ஒருமைப்பாட்டை மையமாகக் கொண்டு நமது கல்விக்கொள்கை அமைந்துள்ளது. ஆனால் நடைமுறையில் ஒருமைப்பாட்டுக்கு எதிரான போக்கில் மலாய்க் கல்வியாளர்களின் போக்கு செயல்படுகிறது. வெறும் கண்டனங்களால் மட்டும் இப்படிப்பட்ட இன இழிவு பரப்புரைகளைத் தடுத்துவிட முடியாது. தமிழர் சமூக இயக்கங்கள் நூலை வெளியிட்டிருக்கும் தேசிய மொழி வளர்ப்பு நிறுவனத்துடனும் கல்வி அமைச்சுடனும் கலந்துரையாடல்கள் நடத்திப் பாட நூல்களில் இப்படிப்பட்ட பகுதிகள் இனியும் வராமல் இருக்க வழி செய்ய வேண்டும்.

- malaysiaindru

சுதந்திர மலேசியாவின் நிரந்தர அடிமைகள்

(- முனைவர் நாகப்பன் ஆறுமுகம்) இன்றைய மலேசியாவின் அழகான கோபுரங்களுக்கு அடித்தளமாக இருந்தது தோட்டத் தொழில்தான். தொடக்கக் காலத்தில் தேயிலை, கரும்பும் பின்னர் ரப்பர், எண்ணெய்பனையும் இந்த நாட்டின் முகவரிகளாக அமைந்தன.

மலாய் ஆட்சியாளரிடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தால் இந்த மண்ணை இலவசமாகப் பெற்றுக் கொண்ட பிரிட்டீஷ் காலனித்துவவாதிகள் ஒப்பந்தக் கூலிகளாகத் தமிழரை “இறக்குமதி” செய்து காடுகளைக் கழனிகளாக மாற்றினர். வந்தவர்களில் செத்தவர்கள் போக மற்றவர்கள் சாகும்வரை எலும்பு தேய உழைத்தனர். ஏற்றுமதி செய்யப்பட்ட விவசாய உற்பத்திப் பொருள்கள் பயனீட்டுப் பொருள்களாக மாறி உலகெங்கும் பரவின. ஐரோப்பிய “கம்பெனிகள்” வளம் பெற்றன. ஆனால் தோட்டத் தொழிலில் ஈடுபட்டிருந்த தமிழர் அடிமைகளாகவே வாழ்ந்து கொண்டிருந்தனர்.

இனியும் குனிய முடியாது என்ற நிலை வந்தபோது தோட்டத் தொழிலாளரில் சிலர் நிமிரத் தொடங்கினர். உரிமைக் குரல் சன்னமாகத் தொடங்கி வெடித்து வீரிட்டது. 1941இல் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 20,000 தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.

அந்தக் கோரிக்கைகள்

1. ஒரே மாதிரியான வேலை செய்யும் சீன, இந்தியத் தொழிலாளர்களுக்குச் சமமான சம்பளம் தர வேண்டும். அப்போது தமிழர் பெற்ற நாள் சம்பளம் 55 காசு. சீனர் பெற்றது 85 காசு.

2. தோட்டப் புறங்களில் தமிழ்த் தொழிலாளர்களைக் கண்காணிக்கும் கிராணிமார்களாக இருந்தவர்கள் மலையாளிகளும் யாழ்ப்பாணத் தமிழர்களும். இவர்களுக்குப் பதிலாகத் தமிழரே கிராணிமார்களாக வர வேண்டும்.

3. ஐரோப்பிய துரைகளும் இந்தியக் கிராணிமார்களும் தமிழ்ப் பெண்களிடம் புரியும் பாலியல் கொடுமைகள் நிறுத்தப்பட வேண்டும்.

4. தோட்டப் புறக் குழந்தைகளுக்குக் கல்வி வசதி வேண்டும்.

5. ஐரோப்பியத் துரைகளும் இந்தியக் கிராணிகளும் எதிரில் வரும்போது சைக்கிளை விட்டு இறங்காமல் போவதற்குத் தமிழ்த் தொழிலாளர்களுக்கு உரிமை வேண்டும்.

6. 12 மணி நேர வேலை முறையைக் குறைத்து 8 மணி நேர வேலைமுறை வர வேண்டும்.

7. தொழிலாளர்களுக்குச் சங்கம் அமைத்துக் கொள்வதற்கு அனுமதி வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளோடு ஐந்து ஆண்டுகள் போராட்டம் நடந்தது. 1941,ல் வேலை நிறுத்தமும் நடைபெற்றது. விளைவு ஐந்து காசு சம்பள உயர்வு. வேறு எந்த மாற்றமும் வரவில்லை.

இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் கம்யூனிஸ்டுகள் என்று முத்திரை குத்தப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். அப்போது பிரிட்டீஷ் காலனித்துவத்துக்கு எதிராகக் கம்யூனிஸ்டுகள் கொரிலாப் போர் நடத்திக் கொண்டிருந்தனர். தோட்டத் தொழிலாளருக்கான போராட்டம் கம்யூனிஸ்டு போராட்டமாகத் திரிக்கப்பட்டது. 1948இல் அவசர காலம் பிரகடனப்படுத்தப்பட்டது.

இராணுவத்தினர் களம் இறங்கிப் போராளிகளைச் சரமாரியாகச் சுட்டுத் தள்ளினர். தொழிற்சங்கத் தலைவர்கள் கம்யூனிஸ்டுகளுக்கு ஆதரவானவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டனர். இவர்களில் மலாயா பொது தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த எஸ்.எ.கணபதி புடு சிறையில் தூக்கிலிடப்பட்டார். வீரசேனன் என்ற மற்றொரு போராட்டவாதி சுடப்பட்டார்.

இவ்வாறு தோட்டத் தொழிலாளர் போராட்டம் ஒடுக்கப்பட்டது. மீண்டும் அதே அடிமைத்தனத்தின் அடித்தளத்தில் அவர்கள் வாழ்க்கை தொடர்ந்தது. இன்றும் தொடர்கிறது.

இன்று

நாடு முழுவதும் செம்பனைத் தோட்டத் தொழிலாளர் மாதச் சம்பளம் கோரி கடந்த 27 மாதங்களாகப் போராடினர். தொழிலியல் நீதிமன்றம் நேற்று (14 டிசம்பர் 2010) வழங்கிய தீர்ப்பில் மாதச்சம்பளக் கோரிக்கை தள்ளுபடி செய்யப்பட்டது. நாள்படி 1.35 காசிலிருந்து 1.60 காசாக 25 காசு உயர்த்தப்பட்டது. இது வேலைக்குச் செல்லும் ஒவ்வொரு நாளைக்கும் வழங்கப்படும். மாதத்தில் 25 நாட்கள் வேலை செய்தால் ஏறத்தாழ 300 ரிங்கிட் மட்டுமே ஊதியமாகப் பெற முடிகிறது.

தோட்டப் புறங்களில் இந்தோனேசியத் தொழிலாளர்களும் குத்தகையில் வேலை செய்யும் வங்காள தேசிகளும் இதைவிடக் குறைந்த வருமானத்தில் வேலை செய்யத் தயாரய் இருப்பதால் தலைமுறை தலைமுறையாகத் தோட்டத்தில் வேலை செய்து வந்த இந்தியர்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.

நாடு விடுதலை அடைந்து 54 ஆண்டுகள் ஆன பின்னும் தோட்டத் தொழிலாளர் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. நாடு முன்னேறிவிட்டது. தோட்டங்களை விழுங்கிக் கொண்டு மேம்பாட்டுத் திட்டங்கள் நிமிர்ந்து நிற்கின்றன. விவசாயத் துறையை மலேசிய அரசு பின்னுக்குத் தள்ளி தொழிற்துறையை அந்த இடத்தில் வைத்துவிட்டது. விவசாயத் துறை அலட்சியப்படுத்தப்பட்டது போல் அதனைச் சார்ந்த மக்களும் முற்றிலும் அலட்சியப்படுத்தப்பட்டுள்ளனர்.

தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் பல ஆண்டுகளாக மாதச் சம்பளம் கேட்பது போல் நடித்துக் கொண்டிருக்கிறது. பிள்ளையைக் கிள்ளுவதும் தொட்டிலை ஆட்டுவதுமாக இந்தச் சங்கம் தொழிலாளர் முதலாளி இரண்டுக்கும் நடுவே நாடகமாடிக் கொண்டிருக்கிறது. இவர்களுக்கிடையில் வீட்டுப் பணிப் பெண்களுக்கும் காவலர்களுக்கும் மாதச்சம்பளம் கொடுக்க முயற்சி செய்து வரும் மனித வள அமைச்சர் தோட்டத் தொழிலாளர் பற்றி வாய் திறக்கவில்லை.

இன்று உள்நாட்டுத் துரைகளே மிகப் பெரிய தோட்டங்களின் முதலாளிகள் ஆகியுள்ளனர். பிரிட்டீஷ்காரர்களிடமிருந்து நாட்டைத் திரும்பப் பெற்றுக் கொண்ட இந்த உள்நாட்டுத் துரைகள் நவீன காலனித்துவவாதிகளாக பழைய அடிமை முறையைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர்.

தொழிற்சாலைகளில் 700 ரிங்கிட்டுக்கும் குறையாத ஊதியம் பெறும் அடிநிலைத் தொழிலாளரைக் காட்டிலும் தோட்டப்புறத் தொழிலாளர்கள் மோசமான வருவாயைப் பெறுகின்றனர். மோசமான வீட்டு வசதி, சுற்றுச்சூழல், வறுமை போன்றவற்றுக்கு நடுவே பிறந்து வளரும் பிள்ளைகள் போதுமான கல்வி அறிவும் வழிகாட்டலும் இல்லாமல் வெகு விரைவில் சமூகச் சீர்கேடுகளில் சிக்கிக் கொள்கின்றனர்.

நகர்ப்புறங்களின் புறம்போக்குப் பகுதிகளும் தோட்டப்புறங்களும் தமிழர் குழுமி வாழும் பகுதிகளாக இருக்கின்றன. வறுமைக் கோட்டைக் கடக்க முடியாத இவர்களிலிருந்து உற்பத்தியாகி வளரும் இளம் தலைமுறையினர் “ஒரே மலேசியாவுக்குள்” நுழைவது எப்படிச் சாத்தியமாகும்?

தோட்டப்புறங்கள் தனியார் நிறுவனங்கள். அங்கே நடக்கும் எதற்கும் நாங்கள் பொறுப்பல்ல என்று அம்னோ அரசு கண்ணை மூடிக் கொள்கிறது. தேர்தல் காலத்தில் மட்டும் வாக்கு கேட்கப் போகிறது. தேர்தலில் வெற்றி பெறுவதற்குப் போடும் ஆட்டுக்கறி சாப்பாட்டுக்கு அப்பால் நிரந்தரமாக இவர்கள் வாழ்க்கையில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்குரிய திட்டங்கள் எங்கே?

வறுமை மற்றெல்லாச் சீர்கேடுகளுக்கும் தாய். தோட்டப்புறத் தமிழர் இந்த வறுமையின் குழந்தைகளாக இன்னும் எத்தனை ஆண்டுகள் வாழ வேண்டும்? சுதந்திர மலேசியாவின் நிரந்தர அடிமைகளா இவர்கள்?

(மலேசியா இன்று)

About the Author

Admin has written 895 stories on this site.

jegaveeraphandian wrote on 19 January, 2011, 14:57

எது எதற்கோ சங்கம் அமைத்து விழா எடுக்கிறார்கள் மலேசியத் தமிழர்கள். இந்த மண்ணில் நமக்காகப் போராடி குற்றவாளியாக்கப்பட்டு நீதிக்காக உயிர்நீத்த தியாகச்சுடர்களாம் வீரசேனன், எஸ். எ . கணபதி போன்ற வீரத் திலகங்களுக்கு உரிய மரியாதையை மலேசியத் தமிழர்கள் கொடுக்கவில்லையே என்று நினைக்கும்போது உள்ளம் இரத்தக் கண்ணீர் வடிக்கிறது.
சினிமா நடிகர்களுக்கும் போலி அரசியல்வாதிகளுக்கும் செய்யும் மரியாதையில் நாம் மதிமயங்கிக் கிடக்கிறோம்; ஆர்ப்பாட்டம் செய்கிறோம். ஆனால் நமக்காகச் செத்துமறைந்தவர்களுக்கு எதுவும் செய்யாமல் நன்றி இல்லாதவர்களாய் இருக்கிறோமே என்னே கொடுமையையா!
நிலைமை இப்படியே தொடருமானால் பேரறிஞர் அண்ணா சொன்னதைப்போல நம்மவருக்குத் தொண்டுசெய்ய எந்த நல்ல மனிதரும் இல்லாமலே போய்விடுவார்கள் என்பது உண்மையாகிவிடும்! போலிகள் மிகுந்த ஆராவாரத்துடனும் ஆற்பாட்டத்துடனும் தமிழ்ச் சமுதாயத்தைக் கொள்ளையடிக்கப் புறப்படுவார்கள். இப்போதே அதை நாம் கண்ணாரக் காண்கிறோமே..! வாழ்க தமிழினம்!

Monday, January 17, 2011

பிடிவாதமாக இருந்தால்...

முனைவர் ஆறு. நாகப்பன்

இண்டர்லோக் பிரச்சனையை இனியும் நீட்டிப்பது பரிசானுக்கு ஆபத்தாக முடியலாம். இண்டர்லோக் நாவலை மீட்டுக் கொள்ள மாட்டோம் என்று பாரிசான் பிடிவாதமாக இருக்குமானால் அடுத்த பொதுத் தேர்தலுக்கு இதனை இரண்டாவது அரசியல் சுனாமியாக மாற்ற இந்திய இயக்கங்கள் திட்டமிடக் கூடும்.

இந்தியர்களிடையே இண்டர்லோக் விவகாரம் தொடர்ந்து பரவி வருகிறது. இந்தியர் ஒருங்கிணைப்புப் பேரவைகள் பல இந்தியர்களை ஈர்க்கும் கையேடுகளைத் தயாரித்து வருகின்றன. தைப்பூச விழாவின்போது இக்கையேடுகள் அனைத்து இந்தியர் கைகளுக்கும் போய்ச் சேரும் வாய்ப்பு இருக்கிறது.

இதற்கிடையில் மஇகா அமைச்சரைச் சந்திப்போம், அமைச்சரவையில் பேசுவோம், உணர்ச்சியைத் தூண்டக் கூடிய சொற்களை மட்டும் அகற்றினால் போதுமானது என்றெல்லாம் பேசி வருகிறது. இந்த வார்த்தைகள் மீது இந்தியர்களுக்கு அணுவளவும் நம்பிக்கை இல்லை. மஇகாவின் வார்த்தைகளை அம்னோவின் “ஆபீஸ்பையன்” கூட மதிக்க மாட்டான் என்பதுதான் கடந்த கால வரலாறு. இந்த விஷயத்தில் அதுவேதான் நடக்கப் போகிறது என்பதால் இந்தியர்கள் அரசுக்கு அழுத்தம் கொடுத்து நாவலை மீட்டுக்கொள்ளும் முடிவை வற்புறுத்துகிறார்கள்.

கோழியும் குழம்பும்

நாவலில் உள்ள சில வார்த்தைகளை மட்டும் நீக்கினால் போதுமானது என்று அம்னோ அடிவருடிகள் சிலர் கூறி வருவதைக் கேட்கும்போது நமக்கு வழக்கமாக நடக்கும் ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. அரசு அலுவலகங்களில் அல்லது ஒருமைப்பாட்டு விருந்து நிகழ்ச்சிகளில் இந்தியர்களுக்கு மரக்கறி உணவு கேட்போம். அப்போது ஏற்பாட்டாளர் சர்வ அலட்சியமாக ஒரு வழி சொல்லுவார். கோழிக்கறியில் உள்ள கோழியைத் தள்ளிவிட்டுக் குழம்பை மட்டும் எடுத்துக் கொள்ளுங்களேன் என்று.

மலாய்க்காரர்கள் நம் வீட்டுத் தீபாவளிக்கு வரும்போது அவர்களுக்கு எது ஹலால், எது ஹலால் இல்லை என்றெல்லாம் நாம் தெரிந்து வைத்து அவர்களுக்கு ஏற்றாற் போல் செய்கிறோம். ஆனால் மலாய்க்காரர்கள் விருந்திலும் அரசு விருந்துகளிலும் கோழியைத் தள்ளிவிட்டுக் குழம்பை எடுத்துக் கொள்ளச் சொல்வார்கள். மஇகா. தலைவர்களுக்கும் இந்த அனுபவம் இருக்கலாம். அப்போது அவர்கள் மான ரோஷம் பார்க்காமல் உள்ளதை விழுங்கிவிட்டும் வரலாம்.

அதே அணுகுமுறையில்தான் இப்போதும் பேசுகிறார்கள். இப்போதுதான் ஐவர் கொண்ட குழுவை அமைக்கிறார்களாம். அந்தக் குழு புத்தகத்தைப் படித்து முடித்து (புத்தகம் 426 பக்கம்) ஆய்வு செய்து அரசுக்கு மகஜர் கொடுப்பார்கள். மகஜர் கொடுக்கப்பட்டது என்ற செய்தி பெர்னாமா முதல் எல்லா ஊடகங்களிலும் ஒளி, ஒலிபரப்பாகும். அச்சாகும். உணர்ச்சிவசப்பட ஒன்றுமில்லை. எழுத்தாளர் இந்தியர் வரலாற்றைத்தான் எழுதியிருக்கிறார் என்று முடிவை அரசு அறிவிக்கும். நமக்குப் பல பிரச்சனைகளில் கடந்த காலங்களில் ஏற்பட்ட அனுபவம் இதைத்தான் கற்பிக்கிறது.

மஇகாவுக்கும் அம்னோவுக்கும் ஆதரவாக சில அரசு சாரா இந்திய அமைப்புகளும் பேசத் தொடங்கியுள்ளன. நாவலை எதிர்ப்பது போல் நடித்து, படித்துப் பார்த்தோம் அப்படி ஒன்றும் மோசமாக இல்லை. நமக்குத் தேசிய ஒருமைப்பாடு மிக முக்கியம் என்று எழுந்து நின்று தேசிய கீதம் பாடி முடிப்பார்கள். பிரச்சனையை ஆறப் போடுதல், இழுத்தடித்தல், பிறவற்றில் கவனத்தைத் திருப்புதல், மிரட்டுதல் உட்பட சாம, பேத, தான, தண்டம் என்ற உத்திகளையெல்லாம் அரசும் செய்யும். நம்மவரும் செய்வார்கள்.

மரக்கறியாளர் கோழியைத் தள்ளிவிட்டுக் குழம்பை எடுத்துக் கொள்வது எப்படி கூறு கெட்டதனமோ அப்படித்தான் சில சொற்களை மட்டும் நீக்கிவிட்டு நாவலைப் பயன்படுத்துவதும் என்பதில் சில அரசு சாரா இயக்கங்கள் மட்டும் உறுதியாக இருக்கின்றன.

இந்த நேரத்தில் மலேசிய இந்து சங்கம், இந்து இளைஞர் இயக்கம், தமிழ் இளைஞர் மணி மன்றம், கேரளா சங்கம், ஆந்திரா சங்கம், தமிழ் எழுத்தாளர் சங்கம், ஏராளமான சாதிச் சங்கங்கள் அனைத்தும் மௌனம் சாதிக்கின்றன. நாவலில் கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தென்னிந்தியர் எல்லாரும் பறையர்தான் என்று ஒட்டுமொத்தமாகச் சொல்லிவிட்டார்கள். எனவே, இது தென்னிந்தியரில் குறிப்பிட்ட ஒரு சிறிய பிரிவினர் சம்பந்தமான பிரச்சனை அல்ல என்பதை தென்னிந்தியர் எல்லாரும் புரிந்து கொண்டு ஒன்றுபட்ட போராட்டத்திற்கு நாம் ஒருங்கிணைய வேண்டும்.

பல இந்திய அரசு சாரா இயக்கங்கள் மௌனம் சாதிப்பது ஏன் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தாம். கடந்த ஆண்டு பிரதமர் நஜிப் தேர்தலுக்கான பல “முஸ்தீபுகளைச்” செய்திருக்கிறார். இந்தியர்களுக்கு மஇகா. வழியாக மானியம் வழங்கும் மரபை மாற்றி அவரே ஒவ்வொரு இயக்கமாக அழைத்து நெஞ்சுக்கு நெஞ்சு நேராகப் பேசி இலட்சங்களை வாரிக் கொடுத்திருக்கிறார். வாங்கிக் கொண்டு வந்த அமைப்புகள் பாரிசானுக்குத் தங்கள் விசுவாசத்தைப் பதிவு செய்ததோடு அடுத்து பல இலட்சங்களை வாங்கும் திட்டத்தில் பாரிசானுக்குப் போஸ்டர் ஒட்டத் தயாராகி இருக்கிறார்கள்.

இனி இந்தியர்களின் மானம், மரியாதை, சமூக நல உரிமைகள் பற்றி இந்த அமைப்புகள் வாயைத் திறப்பார்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

பாக்காதானில் ஒருமைப்பாட்டுச் சீர்குலைவு, பாஸ் – அம்னோ பேச்சுவார்த்தை, இந்திய இயக்கங்களைப் பிரித்து வைப்பதில் மிகப் பெரிய வெற்றி, இவற்றையெல்லாம் பாரிசான் தனக்குரிய வெற்றி வாய்ப்புகளாக கருதி உள்ளது. நஜிப் தனது வியூகத்தில் வெற்றி பெற்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பாரிசான் வெற்றி பெற்றாலும் பாக்காதான் வெற்றி பெற்றாலும் இந்தியர் நிலையில் எந்த மாற்றமும் வந்துவிடப் போவதில்லை. இண்டர்லோக் விஷயத்தில் பாக்காதான் தன் வண்ணத்தைக் காட்டிவிட்டது. இந்தியர்களுக்கு ஆதரவாகப் பேசினால் மலாய்க்காரர் வாக்குகள் திசை மாறிப்போகும் என்ற அச்சத்தில் பாக்காதானும் மௌனம் சாதிக்கிறது.

தேர்தலுக்கு முந்திய சூழ்நிலை பாரிசானுக்கு ஆதரவாக இருந்தாலும் இண்டர்லோக் நாவல் தொடர்பான பிரச்சனை வலுத்து வருவதால் காலதாமதம் இல்லாமல், கௌரவம் பார்க்காமல் பாரிசான் அரசு இண்டர்லோக் நாவலை மீட்டுக் கொண்டு நூற்றுக் கணக்கணக்கான நல்ல நாவல்களில் ஒன்றைப் பாடநூலாக வைக்கும் முடிவை உடனே எடுக்க வேண்டும்.

தாமதமாகும் ஒவ்வொரு நாளும் பாரிசான் சில ஆயிரம் வாக்குகளை இழந்து கொண்டிருக்கிறது.

You can leave a response, or trackback from your own site.

8 Responses to “பிரச்சனையை நீட்டிப்பது பாரிசானுக்கு ஆபத்து!”

  1. Kaasu says:

    Novel Interlok pernah menjadi bahan didik sebelum ini di zaman bapak. Bila mana anak berkuasa maka dibawa kembali. Bukan itu sahaja banyak perkara lama dibawa kembali kerana diteliti “old is gold”. Terima sahajalah. Api boleh membakar, bila sebut perkataan api adakah lidah kita panas? Ada apa pada perkataan… ertinya adalah penting.

    Adakah tiada sistem kasta di India sekarang? Tiadakah ada perbezaan kasta di Malaysia kini terutamanya dalam hal-hal cinta dan kahwin?

    Tepuk dada tanya selera. Jika kita bersih, bila orang kata kotor kita boleh lawan. Kalau sini pun tong sampah, orang kata apa pun terima dan cuba bersihkan.

  2. s.maniam says:

    the book is inaccurate and disgrace for the indian community.

  3. அரசின் அடுத்த நடவடிக்கை எப்படி அமைந்தால் மலேசிய இந்தியர்கள் மகிழ்வார்களென்பதை மிக அழகாக எடுத்துச் சொல்லி இருக்கின்றீர்கள். நம் பிரதமர் மலேசிய இந்தியர்களுக்கு மான உணர்வே மிகமிக முக்கியமென்பதை உணர்ந்தவர். இவ்வளவு காலம் பரச்னை இல்லமல் பாடம் நடத்த இன்னும்
    எத்தனையோ நூல்கள் பல அதில் சேர்த்துக்கொள்ள இன்னமும் தகுதிபெற்று இருக்கும் போது இந்த பிரச்னைக்குரிய நூலை எடுத்துவிடச் சொல்லி நாம் எல்லோருமே பிரதமரிடம் சொல்கிறோம்! இதில், இனி நமக்கு ஏமாற்றம் வராது. நம் பிரதமரை நம்பி, நாம் பொறுத்திருந்து பார்ப்போம்! அனைத்து இனத்தின் மானம் பறிபோகாமல் பிரச்னையைத் தீர்த்துவிடுவார்.

  4. 1Malaysian says:

    Teresa Kok was arrested under ISA on rumours that she talked about azan prayers which was denied by Mosque management. Even for little, little things Malays are demanding ISA to be used. Then why ISA is not being used on those who insult Hinduism, Indians etc. Is this 1Malaysia?

  5. வேங்கை says:

    நடுநிலையான கட்டுரை.. இந்தியர் நலனில் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் ஒன்றுதான் என்பதனை நாம் நன்கு உணர வேண்டும். நம் ஓட்டுகள்தான் அவர்களுக்கு முக்கியம். நம் பிரச்சனைகள் அல்ல! நேற்று என் நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் தலைநகரில் ஒரு பிரபலமான மலாய் மொழி ஆசிரியர். 1000 மாணவர்களுக்கு மேற்பட்டவர்கள் அவரிடம் பாடம் படித்து மலாய் மொழியில் A எடுத்திருக்கின்றனர். இருப்பினும், அவரை இன்று அவர் மாணவர்களே பறையா என்று அழைக்கத்தொடங்கி விட்டதாக மிகவும் மனம் வருந்தி கூறினார்.

    பல்லைக் கடித்துக் கொண்டேன், ஆனால் எதுவரையில் இந்த பொறுமை எல்லை காக்கும் என்று தெரியவில்லை!

  6. malaysian says:

    Mereka yang dari arah ke utara sedikit bercakap bahasa Malayalam atau Telugu, tetapi hampir semuanya tahu bahasa Tamil. Malayalam dan Telugu pun berasal dari satu rumpun bahasa Dravidia. Satu perkara besar yang membuatkan mereka senang berkaul adalah kerana mereka tergolong dalam satu kasta Paria. (?????? 211)
    ???????????? ?????????????? ???????? ??????????????? ??????????. ????????????? ????????? ????????. ?????????? ?????????? ????????????? ????????????? ??????????????. ??????? ??????? ????????? ????????????? ??????; ??????? ????????? ?????? ??????? ?????????????????.
    Mereka tidak perlu takut akan mengotori sesiapa kalau bersentuhan. (?????? 211)
    ???????? ???????? ??????????? ??????? ?????? ?????????????.
    Mereka berasak-asak seperti kambing . (?????? 211)
    ??????????? ???????????????.
    Disini, pekerjaan yang membezakan kasta tidak ada. (?????? 216)
    ???? ?????????? ?????????? ??????? ?????????.
    Kuli-kuli Cina itulah yang lebih banyak mendapat kesempatan. Maniam mengakui bahawa mereka lebih pantas bekerja dan sedikit bicara. (?????? 218)
    ????? ??????????? ??????? ?????????? ?????????????. ??????? ??????????????? ???? ????????? ??????????? ???????????? ?????? ?????? ??????? ????????.
    Maniam seperti orang India yang lain, tidak pernah khuatir tentang keselamatan isterinya. (?????? 218)
    ???? ???????????????? ??? ????????? ????????????????? ???????? ???????????? ?????.
    Dia gembira hidup di negeri ini kerana untuk pertama kali dalam hidupnya dia berasa dirinya sebagai manusia seperti orang lain. (?????? 218)
    ??? ???????? ????? ????????? ?????? ?????? ?????? ??????????? ???? ??????????? ???????????? ??????????.
    Disini dia tidak sahaja bebas bercampur gaul dengan orang lain sama sebangsanya, malah dia tidak takut dengan pantang larang yang terdapat di negaranya apabila seorang India daripada kasta rendah menyentuh orang India daripada kasta tinggi. (?????? 218 – 219)
    ????? ???? ??? ??????????? ????????????? ????????? ??? ??????????? ?????? ?????????????????? ??????? ?????????????. ??????? ????????????? ???????????????? ???????????.
    Dia tidak sahaja dimaki hamun dengan kata-kata yang kesat, malah disisihkan daripada masyarakat sehingga dirinya dan orang-orang yang sekasta dengannya menjadi lebih hina daripada. (?????? 219)
    ?????????????? ???????????? ???????? ???? ???????????? ??????????????. ??????????????? ?????????????????.
    Di negeri ini, orang daripada keturunan kasta tinggi, kasta Brahma memakai punul yang melintang di tubuh, tetapi dia tidak takut menyentuh orang itu. (?????? 219)
    ??????????? ???????? ??????? ??????????? ?????? ??????????????. ?????, ????????? ?????????? ???? ????????????.
    Dia boleh membeli barang daripada penjaja dengan memberikan wang dari tangan ke tangan; tidak seperti seperti di negaranya, dia mesti meletakkan wang itu di suatu tempat dan penjaja itu akan menyiram wang itu dengan air sebelum diambil dan dimasukkan ke dalam petinya. (?????? 219)
    ??????????????? ?????? ???????????? ???????? ???????? ???????????. ???? ???????? ???????????. ???????? ??????????? ?????????? ????????? ????????. ??????? ?????? ??????????? ???? ??????? ??????? ?????? ?????????? ???????????? ????????.
    Apatah pula lembu ialah binatang suci bagi orang Hindu; dan kalau binatang itu mati, seperti ibunya sendiri yang mati. (?????? 220)
    ?????????? ?????????? ???????? ?????????????. ?????????? ???????? ??? ???? ?????????? ?????????????.
    Tidak makan tengah hari tidak mendatangkan masalah, asalkan dia dapat mengunyah sirihnya seperti lembu atau kambing memamah biak. (?????? 224)
    ???? ???? ??????????? ??????? ?????????. ???, ???????????? ????????????? ???????? ?????????? ??????.

    Setelah menjalani beberapa upacara yang meletihkan, maka pesta perkhawinan Maniam dan Malini pun berakhir. (?????? 229)
    ?????? ???????????? ??????????????? ??????? ?????? ?????? ???????? ???????? ???????????.

    Dia gertak sahaja, orang kulit hitam ini tentu takut kecut. (?????? 253)
    ???? (?????????????) ??????????? ?????? ?????????) ??????????????.
    Suppiah menerpa ke hadapan dan sujud di kaki orang putih…… Lantas, dia menendang Suppiah. Suppiah terjungkir. (?????? 256)
    ?????? ????? ???????????? ?????? ???????? ???????????? ????????…… ???????????? ?????????? ????? ?????????? ???? ???????? ??????????.
    Dia berasa bangga kerana anjing orang putih itu jinak dengannya. (?????? 276)

  7. malaysia tamilan says:

    Saya sokong penuh pada karang ini..apa yang maksudkan karang ini adalah benar..!! kita mesti hapukan buku interlok ini..semasa sekali ini tak boleh gunakan dalam sekolah..buku ini tunjukkan anak-anak tamil dan cina adalah pendatang..!! siapa yang beranak selepas 1957 mereka adalah anak malaysia..!! kalau kita baca isu yang tulis oleh En.nagapan adalah benar dan memang benar kita tidak boleh sokong pada interlok..!! umno-barisan makan isinya hanya baki tulung pada kaum lain yang sakit hatinya ada juga parti=parti dan ngo-ngo tunggu untuk tulang itu..!! malunya ada orang dan parti macam ini dalam kaum kita..adakah mereka tahu apa erti maruah sendiri..?

  8. Tamilvanan says:

    ஒரு இன‌த்தை அல்ல‌து ம‌னித‌னை இழிவு ப‌டுத்த‌வ‌து என்ப‌து எந்த‌ ம‌த‌த்திலும் ச‌ம‌ய‌த்திலும் இல்லை. ஒரு நாவ‌லின் மூல‌ம் ஒரு இன‌த்தையே அவ‌மான‌ப் ப‌டுத்துப‌வ‌ன், அத‌ற்கு அங்கிகார‌ம் த‌ருப‌வ‌ன் ம‌ற்றும் சுய‌ன‌ல‌த்திற்காக‌ க‌ண்டும் காணாம‌ல் இருப்ப‌வ‌ன் எல்லாம் நிச்ச‌ய‌ம் ம‌னித‌ உண‌ர்வ‌ற்ற‌வ‌னாய்…ம‌க‌னாய்த்தான் இருப்பான்.

உதுசானின் பொருந்தாத கருத்து!

முனைவர் நாகப்பன் ஆறுமுகம்

இண்டர்லோக் நாவல் தொடர்பான விவாதத்தில் உத்துசான் மலேசியா முன் வைத்த கருத்தையும் அதை ஆதரித்துப் பேசியுள்ள இந்தியக் கல்வியாளர்கள் கருத்தையும் ஒரு சேர மறுக்க வேண்டியுள்ளது.

தென்னிந்தியர்களுக்குள் ஏன் இவ்வளவு சாதிச் சங்கங்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. தென்னிந்தியர் வரலாற்றில் மட்டுமல்ல உலகத்தின் எந்த இனத்தின் வரலாற்றிலும் மக்கள் சில சமூகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது வெளிப்படை. நிலவுடைமை, ஆட்சியுடைமை உடையவர்கள் மற்றவர்களை அடிமைப்படுத்தியுள்ளனர். இரண்டும் இல்லாதவர்கள் பல்வேறு தந்திரங்களால் மற்ற எல்லாரையும் அடிமைப்படுத்தியுள்ளனர். இந்த உண்மை மலேசியா உட்பட தென்கிழக்காசியாவில் வாழ்ந்த மலாய் இனத்தினருக்கும் பொருந்தும்.

சிங்கப்பூரில் சர் ஸ்டாம்போர்ட் ராபிள்ஸுக்கு மொழிபெயர்ப்பாளராய் இருந்த முன்ஷி அப்துல்லா என்ற மலாய் எழுத்தாளர் ஜோகூர், கிளந்தான், திரங்கானு மாநிலங்களில் வாழ்ந்த மலாய்க்காரர்களைப் பற்றியும் அக்கால அரசர்களைப் பற்றியும் நேரில் கண்ட உண்மைகளை எழுதியுள்ளார். ஹிகாயாட் பெலாயாரான் முன்ஷி அப்துல்லா என்ற அந்த நூலில் அவர் சுட்டிக் காட்டிய பல விவரங்கள் இன்று யாராலும் பேசப்படுவதில்லை. அவர் சிங்கப்பூரில் வாழ்ந்ததால் மலாய் அரசர்களுக்கு விசுவாசம் இல்லாதவராக இருந்தார் என்றும் அதனால்தான் மலாய் மக்களையும் அரசர்களையும் அவரால் குறை சொல்லி எழுத முடிந்தது என்றும் முன்ஷி அப்துல்லா விமர்சிக்கப்பட்டார்.

இண்டர்லோக் நாவலை ஆதரித்துப் பேசும் இந்தியக் கல்வியாளர்கள் முன்ஷி அப்துல்லாவும் ஐரோப்பிய ஆய்வாளர்களும் மலாயர் வரலாற்றைப் பற்றி எழுதிய கறுப்பு வரிகளை விளக்கிப் பேச முடியுமா?

இந்தியாவில் பிராமணர் உருவாக்கிய வருணாசிரம கொள்கையை இந்தியாவுக்கு வந்த மேலை நாட்டு அறிஞர்கள் பலவாறாக விமர்சனம் செய்தனர். இவர்களில் கிருத்துவ சமயம் சார்ந்தவர்கள் இந்தச் சமூக ஏற்றத்தாழ்வை மத மாற்றத்திற்கு ஆதரவாகப் பயன்படுத்திக் கொண்டனர். இந்தியர் பற்றியும் தென்னிந்தியர் பற்றியும் இவர்கள் எழுதிய நூல்களை மேற்கோள்களாகப் போற்றி இந்தியரையும் தமிழரையும் நெடுங்காலமாய்ப் பலர் இழிவுபடுத்தி வருகின்றனர்.

இப்படிப்பட்ட நூல்களை மேற்கோளாகக் கொண்டுதான் இண்டர்லோக் நூலாசிரியர் தனது நூலை எழுதியிருக்க வேண்டும்.

உலகின் எல்லா இனத்தினருக்கும் தங்கள் வரலாற்றில் கறுப்புப் பகுதிகள் உள்ளன. ஆட்சி அதிகாரமும் அனைத்துலக ஆதரவும் கையில் வைத்திருப்பவர்கள் தங்கள் பழைய வரலாற்றை மறைத்தும் மாற்றியும் தங்கள் விருப்பம் போல் எழுதிக் கொள்ள முடியும். மலேசியாவில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் மலாயா வரலாறு படித்தவர்கள் இப்போது உள்ள வரலாற்றுப் பாட நூல்களை எடுத்துப் பார்த்தால் பல விவரங்கள் மாறிப் போயிருப்பதைச் சுட்டிக் காட்டுவர். வரலாற்றை மாற்ற முடியாது என்றாலும் காலத்தின் போக்கு கருதி சில பகுதிகளை மறைத்து வைப்பது எல்லா நாடுகளிலும் இனங்களிலும் இயல்பாய் உள்ளது. மலேசியாவிலும் இது தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்தியரிடையே காணப்படும் வருணாசிரமம், மற்றும் சாதி வேறுபாடுகள், கடந்த 1500 ஆண்டுகளாகத் திருமூலர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் காலந்தொட்டே தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் ஈ.வே. இராமசாமிப் பெரியார், அம்பேத்கார் போன்றோர் சாதியத்துக்கு எதிரான கடுமையான போரை நிகழ்த்தினர். என்றாலும் சாதியின் ஆணி வேர் இன்னமும் அழியவில்லை. நாலாந்தர அரசியல்வாதிகள் தோல்வியின் விளிம்புக்கு வந்துவிட்டபோது சாதியை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்திக் கொள்வது வழக்கமாகிவிட்டது. இந்த அரசியல் போக்கு இந்தியாவிலிருந்து மலேசியாவுக்கும் பரவிவிட்டது.

மலேசியத் தென்னிந்தியர் மறுப்பதையும் மறக்க விரும்புவதையும் இண்டர்லோக் நாவல் மீண்டும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. மலாய் இலக்கியங்களில் இந்தியர் இழிவுபடுத்தப்படுவது இது முதல் தடவையல்ல. கடந்த அறுபது ஆண்டுகளாகவே மலாய் எழுத்தாளர்கள் இதனைச் செய்து வருகின்றனர். இண்டர்லோக் பொது வாசிப்புக்கான ஒரு நூலாக இருந்தால் அது குறித்து இந்த அளவுக்குக் கொந்தளிக்க வேண்டி இருக்காது.

மாணவர்க்கு ஆகாது

இண்டர்லோக் நாவலை ஆதரித்துப் பேசுவோர் ஓர் உண்மையை மறந்துவிடுகின்றனர். வயதாலும் கல்வியாலும் முதிர்ச்சி அடைந்த மலேசியர் இண்டர்லோக் நாவலை வாசிக்கும்போது ஏற்படும் விளைவுக்கும் பதினாறு வயது பல இன மாணவர்கள் ஓர் அறையில் அமர்ந்து வாசிக்கும்போது ஏற்படும் விளைவுகளுக்கும் நிறைய வேறுபாடு உள்ளது.

இதனைப் படிக்கும் மலாய்க்கார மாணவர்கள் இந்திய மாணவர்களைக் கேலி செய்யும் வாய்ப்பு நிறைய உள்ளது. இதுதான் வரலாறு, இதுதான் ‘ரியலிடி’ என்று அவர்களிடம் சொல்ல முடியாது. பறையா என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்பதும் என்ன வரலாற்றுப் பின்னணி என்பதும் முக்கியமல்ல, அது என்ன பொருளில் பயன்படுத்தப்படுகிறது என்பதே முக்கியம். இங்கு இந்தியர்களை இழிவுபடுத்தும் நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது.

மலேசியாவில் வாழும் எல்லா இனத்தினரும் தத்தம் பண்பாடுகளைப் பேணுவதோடு தாம் மலேசியர் என்ற ஒரு நாட்டின் மக்கள் என்ற உணர்வை ஏற்படுத்துவதே சத்து மலேசியாவின் உட்பொருளாய் இருக்க வேண்டும். இண்டர்லோக் சத்து மலேசியா கோட்பாட்டுக்கு எதிரானதாய் உள்ளது.

கடந்த காலங்களில் இந்திய மாணவர்கள் கெலிங் என்று அழைக்கப்பட்டனர். அப்படி அழைத்த ஆசிரியர்கள், மாணவர்களுக்கு எதிராக இந்திய மாணவர்கள் கலவரம் செய்ததுண்டு. எல்லா இன மாணவர்களும் ஒரே பள்ளியில் படித்தால் ஒருமைப்பாடு வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு இடைநிலைப்பள்ளிகளில் இதுவரை நிறைவேறவில்லை. அதற்கான பல காரணங்களில் இப்படிப்பட்ட இன இழிவு சொற்களும் ஒரு காரணம். இனி கெலிங் என்ற சொல்லோடு பறையா என்ற சொல்லும் தாராளமாகப் பயன்படுத்தப்படும். இதனால் இடைநிலைப் பள்ளி மாணவர்களின் ஒற்றுமை சீர்குலையும். தொடர்ந்து இந்திய மாணவர்களிடம் ஏற்படப் போகும் மனோவியல் பாதிப்புகள் குறித்தும் கல்வியாளர்கள் சிந்திக்க வேண்டும்.

இந்தச் சொல்லினால் தாம் இழிவுபடுத்தப்படுவதாய் உணரும் மாணவர்கள் இந்த நூலைக் கருத்தூன்றிப் படிக்க இயலாது. இதனால் இந்நூலிலிருந்து எழுப்பப்படும் வினாக்களுக்கு அவர்களால் சரியாக விடையளிக்க முடியாது. இண்டர்லோக் மலாய் மொழிப் பாடத்தின் கட்டாய நூல் என்பதால் மாணவர்களின் தேர்ச்சி பாதிக்கப்படும் நிலை ஏற்படும்.

எனவே, இது தென்னிந்தியரின் வரலாறு, ரியலிடி என்று கதைக்காமல் உங்களுக்குள் ஏன் இவ்வளவு சாதிச் சங்கங்கள் என்று கேள்வி எழுப்பாமல் தேசிய ஒருமைப்பாடு, சத்து மலேசியா உணர்வு, மாணவர்களின் ஒற்றுமை, இந்திய மாணவர்களின் மனோவியல் பாதிப்பு ஆகியவற்றைச் சீர்தூக்கிப் பார்த்து இந்த நூலை முற்றாகத் தடை செய்ய வேண்டும். அல்லது குறைந்தபட்சம் பாட நூல் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும்.

You can leave a response, or trackback from your own site.

No Responses to “இண்டர்லோக்: உத்துசான் 1மலேசியாவை எதிர்க்கிறது!”

  1. Your comment is awaiting moderation.

    இண்டர்லோக்கை ஆதரிப்பவர்களில் எல்லோருமே “அந்த நாவலை முழுதும் படித்துவிட்டு கருத்து சொல்லுங்கள் ; படிக்காமல் பேசாதீர்கள் ” என்கிறார்கள். நான் முழுதுமாய் படித்துவிட்டுத்தான் சொல்கிறேன், அது ” பெரியவர்களுக்கு மட்டுமானது! ” என்று அட்டையிலேயே எழுதப்படவேண்டிய புத்தகம். நாவலாசிரியர் 45 ஆண்டுகளுக்கு முன்பு எழுதியதாக கூறுகிறார். நாவல் போட்டியில் ஆறுதல் பரிசை வென்றதாகவும் கூறுகிறார். மிக அற்புதமான கருவை கையில் எடுத்ததற்காக அவரைப் பாராட்ட வேண்டும். இந்த நாவலைத் தாம் பள்ளிப்பிள்ளைகளுக்காக எழுதவில்லை , போட்டிக்காகத்தான் எழுதினேன் என்கிறார். ” மணியம் தாழ்த்தப்பட்ட , ஒடுக்கப்பட்ட சமூகத்தவர். கப்பலில் பெரும்பாலோர் இவரைப்போன்றவர்களாக இருந்ததால் கப்பல் பிரயாணத்தின்போது எந்த அசௌகரியமோ , தீண்டாமை கொடுமையோ நிகழ வாய்ப்பில்லாமல் போனது!” என்று நாகரிகமாக சொல்லியிருக்கலாம். இன்னும் நிறைய சொல்லலாம் . சீனர்களைப்பற்றிச் சொல்லும்போது, ” பன்றிகள் போல” என்று உவமானம் சொல்லி விளக்குவது காலத்திற்கு பொருத்தமான எழுத்தாகுமா? இதுபோன்ற கடுமையான வார்த்தைகள் உள்ளன. இந்த நாவலில் உள்ள எதையுமே மாற்றியமைக்க நூலாசிரியர் இந்த வயதிலும் ஒப்ப மறுக்கிறார். அவருடைய பிடிவாதம் எழுத்தாளனுக்கே உள்ள பிடிவாதம் என்பதால் எனக்கும் பிடித்திருக்கிறது. “பள்ளிப் பிள்ளைகளுக்காக” என்று வரும்போது அவர் சிந்திக்கவேண்டும். பள்ளிப் பிள்ளைகளுக்காக தம்முடைய நாவலை மாற்றியமைக்க முடியாதென்றால் அவருடைய இண்டர்லோக் நாவலைக் கல்வியமைச்சு திரும்பப் பெற்றுக்கொள்வதுதான் சிறந்த முடிவாகும்!