Wednesday, January 5, 2011

தமிழர்களை இழிவுபடுத்து இண்டர்லோக்

தேசிய விருது பெற்ற எழுத்தாளரால் மாணவர்களுக்காக எழுதப்பட்டு இந்த ஆண்டில் பள்ளி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இலக்கியப் பாடநூல் இண்டர்லோக் இந்தியர்களை “பறையா” என்று வர்ணித்துள்ளது. அச்சொல்லும் அதுபோன்ற இதர சொற்களும் அகற்றப்பட்டால் போதுமானது. அப்புத்தகம் தடை செய்யப்பட வேண்டியதில்லை என்று சில இந்திய அரசியல் தலைவர்கள் மன்றாடுகிறார்கள்.

“பறையா” என்று சொல் ஒரு புறமிருக்கட்டும். இப்புத்தகத்தை எழுதிய தேசிய விருது பெற்ற ஆசிரியர் இந்நாட்டு இந்தியர்கள் ஒவ்வொருவரின் பிறப்பை, தன்மானத்தை, தாயின் மானத்தை, கற்பைக் கேள்விக்குறியாக்கி இழிவுபடுத்தி விட்டார்.

இப்பாட நூலைப் படிக்கப்போகும் ஒவ்வொரு இந்திய மாணவனின் தகப்பன் யார் என்ற கேள்வியை எழுப்பும் இலக்கியப் படைப்பு இது.

இதோ ஒன்று:

“Maniam seperti orang India yang lain, tidak pernah khuatir tentang keselamatan isterinya”
(பக்கம் 218).

மற்ற இந்தியர்களைப்போல தன் மனைவியின் பாதுகாப்பைப்பற்றி மணியமும் கவலைப்பட்டதே இல்லை.

இதன் கருத்து என்ன? உள்நோக்கம் என்ன? இது இந்தச் சொல், அந்தச் சொல் பற்றிய விவகாரம் அல்ல.

இதுபோன்ற இன்னும் சிலவற்றை கிள்ளான் அருண் பட்டியலிட்டுள்ளார். அவற்றைப் படியுங்கள்:

“இண்டர்லோக் – INTERLOK – இழிவின் மாற்றுருவம்”

2011-ஆம் ஆண்டு முதல் ஐந்தாம் படிவத்திற்கான மலாய்மொழி இலக்கியப்பாட நூல்கள் மாற்றப்பட்டுள்ளன. “இண்டர்லோக்” (INTERLOK) என்னும் தலைப்பில் அமைந்துள்ள நூல் மலாய் இலக்கியப் பாடத்திற்குரிய நூலாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாண்டு முதற்கொண்டு மலாய் இலக்கியப்பாட மாணவர்கள் இந்நூலைப் படித்து ஆய்வு செய்வர். மலாயாவிற்கு வந்த தென்னிந்தியர்களைப் பற்றிய வரலாற்றுச் செய்திகள் அடங்கிய குறுநாவல் ஒன்று இந்நூலுள் உள்ளது. “மணியம் குடும்பத்தார்” (Keluarga Maniam) என்னும் தலைப்பில் இக்குறுநாவல் எழுதப்பட்டுள்ளது. எழுபத்தைந்து பக்கங்களைக் கொண்ட இக்குறுநாவல் தமிழர்களை இழிவுபடுத்தும் நோக்கத்திற்காக எழுதப்பட்டுள்ளது.

அப்துல்லா உசேன் (Abdullah Hussain) என்பவர் இந்நாவலை எழுதியுள்ளார். அப்துல்லா உசேன் இந்நாட்டின் தேசிய இலக்கியவாதிகளுள் Sasterawan Negara yang kelapan – 1996) ஒருவராவார். இந்நாவல் பல்வேறு வடிவங்களில் தமிழர்களின் எதிர்ப்பை எதிர்நோக்கியுள்ளது. தமிழர்களின் வாழ்வியலை இடித்துரைக்கும் நோக்கில் இந்நாவல் எழுதப்பட்டுள்ளதாகப் பலர் சொல்கின்றனர். தமிழினத்தை ஒட்டுமொத்தமாக இழிவு செய்கின்றது என்னும் கருத்தும் சொல்லப்படுகின்றது.

இண்டர்லோக்கில் உள்ள குறுநாவலால் இந்நாட்டுத் தமிழர்களின் மனம் ஒட்டுமொத்தமாகப் பாதிப்புற்றுள்ளதை மறுப்பதற்கில்லை. ஒரே மலேசியா, ஒரே இனம், ஒரே பண்பாடு, ஒற்றுமையே நம் வாழ்வு என்றெல்லாம் ஓதிக்கொண்டிருக்கும் இந்நாட்டில் இத்தகைய நாவல் எழுதப்பட வேண்டியதன் தேவையென்ன? இத்தகைய நாவலைப் பள்ளி மாணவர்களுக்குரிய பாடநூலாக்குவதற்கான தேவையென்ன? ஒன்றுமே புரியவில்லை, என்னும் குரல்தான் உரக்க ஒலிக்கின்றது.

சாதியம் தொடர்பான செய்திகள் இந்நாவலுள் விரவியுள்ளன. இஃது இந்நாட்டுத் தமிழர்களை இழிவுபடுத்கின்றதென தமிழ்ச் சார்புடய ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்றன. ஆனால், இந்நாவலுள் சாதியம் மட்டுமே குறிக்கப்பட்டிருக்கவில்லை. மாறாக, பல்வேறு கோணங்களில் தமிழர்களின் வாழ்வியலும் பண்பாட்டுக்கூறுகளும் இழிவுபடுத்தப்பட்டிருக்கின்றன. இதற்குரிய சான்றாக இந்நாவலுள் குறிக்கப்பட்டுள்ள செய்திகள் கீழுள்ளவாறு தொகுக்கப்பட்டுள்ளன:

Mereka yang dari arah ke utara sedikit bercakap bahasa Malayalam atau Telugu, tetapi hampir semuanya tahu bahasa Tamil. Malayalam dan Telugu pun berasal dari satu rumpun bahasa Dravidia. Satu perkara besar yang membuatkan mereka senang berkaul adalah kerana mereka tergolong dalam satu kasta Paria. (பக்கம் 211)

மலையாளிகளும் தெலுங்கர்களும் வடக்குப் பகுதியிலிருந்து வந்தவர்கள். அவர்களுக்குத் தமிழ்மொழி தெரியும். மலையாளமும் தெலுங்கும் திராவிடமொழிக் குடும்பத்தைச் சார்ந்தனவாகும். இவர்கள் அனவரும் இயல்பாகப் பழகுவதற்குரிய காரணம்; இவர்கள் எல்லாரும் பறையர் சாதியச் சேர்ந்தவர்களாகும்.

Mereka tidak perlu takut akan mengotori sesiapa kalau bersentuhan. (பக்கம் 211)

யாரையும் தொட்டால் தீட்டாகுமென இவர்கள் பயப்பட வேண்டியதில்லை.

Mereka berasak-asak seperti kambing . (பக்கம் 211)

ஆடுகளைப்போல முண்டியடித்தனர்.

Disini, pekerjaan yang membezakan kasta tidak ada. (பக்கம் 216)

சாதி வேறுபாட்டை உணர்த்தும் வேலைகள் இங்கில்லை.

Kuli-kuli Cina itulah yang lebih banyak mendapat kesempatan. Maniam mengakui bahawa mereka lebih pantas bekerja dan sedikit bicara. (பக்கம் 218)

சீனக் கூலிகளுக்கு அதிகமான வாய்ப்புக் கிட்டுகின்றது. அவர்கள் சுறுசுறுப்புடன் வேலை செய்வதோடு குறைவாகவும் பேசுகின்றனர் என்பதை மணியம் ஒப்புக் கொண்டான்.

Maniam seperti orang India yang lain, tidak pernah khuatir tentang keselamatan isterinya. (பக்கம் 218)

மற்ற இந்தியர்களைப்போல தன் மனைவியின் பாதுகாப்பைப்பற்றி மணியமும் கவலைப்பட்டதே இல்லை.

Dia gembira hidup di negeri ini kerana untuk pertama kali dalam hidupnya dia berasa dirinya sebagai manusia seperti orang lain. (பக்கம் 218)

தன் வாழ்வில் முதல் முறையாகத் தானொரு மனிதன் என்பதை உணர்ந்ததால் அவன் இந்நாட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்தான்.

Disini dia tidak sahaja bebas bercampur gaul dengan orang lain sama sebangsanya, malah dia tidak takut dengan pantang larang yang terdapat di negaranya apabila seorang India daripada kasta rendah menyentuh orang India daripada kasta tinggi. (பக்கம் 218 – 219)

இங்கு அவன் தன் இனத்தாருடன் சுதந்திரமாகப் பழகுவதோடு தன் நாட்டிலுள்ள சமூகக் கட்டுப்பாடுகளுக்கு அச்சமுற வேண்டியதில்லை. அங்குக் கீழ்சாதியினர் உயர்சாதியினருடன் பழகுவதில்லை.

Dia tidak sahaja dimaki hamun dengan kata-kata yang kesat, malah disisihkan daripada masyarakat sehingga dirinya dan orang-orang yang sekasta dengannya menjadi lebih hina daripada. (பக்கம் 219)

கடுஞ்சொற்களால் ஏசுவதுமின்றி அவனையும் அவன் சாதியினையும் ஒதுக்கிவிடுவர். மிருகங்களைப்போல இழிவுபடுத்திடுவர்.

Di negeri ini, orang daripada keturunan kasta tinggi, kasta Brahma memakai punul yang melintang di tubuh, tetapi dia tidak takut menyentuh orang itu. (பக்கம் 219)

இந்நாட்டில் உயர்சாதி மக்களான பிராமணர்கள் பூணூல் அணிந்திருப்பர். ஆனால், இவர்களைத் தொடுவதற்கு அவன் அஞ்சுவதில்லை.

Dia boleh membeli barang daripada penjaja dengan memberikan wang dari tangan ke tangan; tidak seperti seperti di negaranya, dia mesti meletakkan wang itu di suatu tempat dan penjaja itu akan menyiram wang itu dengan air sebelum diambil dan dimasukkan ke dalam petinya. (பக்கம் 219)

வணிகனிடமிருந்து பொருள் வாங்கும்போது கையாலேயே பணத்தைக் கொடுக்கலாம். அவன் நாட்டில் அவ்வாறில்லை. பணத்ததக் குறிப்பிட்ட ஓரிடத்தில் வைத்துவிட வேண்டும். பின்னர் வணிகன் அப்பணத்தின் மீது தண்ணீர் ஊற்றித் தூய்மை செய்தபிறகு பெட்டிக்குள் போட்டான்.

Apatah pula lembu ialah binatang suci bagi orang Hindu; dan kalau binatang itu mati, seperti ibunya sendiri yang mati. (பக்கம் 220)

இந்துக்கள் மாட்டினைப் புனிதமாக எண்ணுகின்றனர். அம்மிருகம் இறந்தால் தம் தாய் இறந்ததுபோல கருதுகின்றனர்.

Tidak makan tengah hari tidak mendatangkan masalah, asalkan dia dapat mengunyah sirihnya seperti lembu atau kambing memamah biak. (பக்கம் 224)

பகல் உணவு உண்ணாவிடில் சிக்கல் ஏதுமில்லை. ஆடு, மாடுகளைப்போல அசைபோடுவதற்கு வெற்றிலை கிடைத்தால் போதும்.

Setelah menjalani beberapa upacara yang meletihkan, maka pesta perkhawinan Maniam dan Malini pun berakhir. (பக்கம் 229)

சோர்வு ஏற்படுத்தும் சடங்குகளுக்குப் பின்னர் மணியம் மாலினி இருவரின் திருமணம் நிறைவுற்றது.

Dia gertak sahaja, orang kulit hitam ini tentu takut kecut. (பக்கம் 253)

அவன் (வெள்ளைக்காரன்) மிரட்டினால் போதும் இந்தக்ழன்) பயந்துவிடுவான்.

Suppiah menerpa ke hadapan dan sujud di kaki orang putih…… Lantas, dia menendang Suppiah. Suppiah terjungkir. (பக்கம் 256)

முன்னே வந்து வெள்ளக்காரன் காலில் விழுந்து கும்பிட்டான் சுப்பையா…… வெள்ளக்காரன் சுப்பையாவை எட்டி உதைத்ததால் அவன் சுருண்டு விழுந்தான்.

Dia berasa bangga kerana anjing orang putih itu jinak dengannya. (பக்கம் 276)

வெள்ளக்காரனின் நாய் தன்னுடன் சாதுவாகப் பழகுவது அவனுக்குப் பெருமையாக இருந்தது.

1900-ஆம் ஆண்டிலிருந்து நாடு விடுதலைப் பெற்றது வாயிலாக மலாய்க்காரர், தமிழர், சீனர் ஆகிய மூவினத்தாரிடயே நிலவிய தொடர்பினையும் ஒற்றுமையினையும் தெளிவுறுத்தும் நோக்கத்திற்காக இந்நாவல் எழுதப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. ஆனால், அடிப்பட நோக்கம் அஃதன்று என்னும் உண்மையை மேற்காணும் குறிப்புகளின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். ஓர் இனத்தாரையும் அவர்கள் சார்ந்துள்ள பண்பாட்டினையும் இழிவு செய்வதற்கு இவ்வளவு போதாதா? இதற்கு என்ன சாக்குப்போக்குச் சொல்லவிருக்கின்றனர்?

ஒற்றுமையே நம் வாழ்வு, நம் பண்பாடு, என முழங்கிக் கொண்டிருக்கும் இந்நாட்டின் கல்வியகங்களில் எத்தகைய சிந்தனகள் புகுத்தப்பட வேண்டுமென்னும் தெளிவற்றிருக்கின்றோம். இது வியப்பிலும் வியப்பாக இருக்கின்றது.

ஒரு நூலைப் பள்ளிப்பாட நூலாகத் தேர்வு செய்வதற்கு எத்தனைத் தரப்பினர் எவ்வளவு காலம் உத்தேசித்திருக்க வேண்டுமென்னும் தெளிவு நமக்கு உண்டு. கல்வி அமைச்சர் முதற்கொண்டு பள்ளிப் பாடநூல் தேர்வுக்குழுவினர் வரையிலாக இதில் ஈடுபட்டுள்ளனர். எத்தனை அதிகாரிகள் இந்நாவலைப் படித்திருப்பர்? எத்தனனப் படிநிலைகளைத் தாண்டி இந்நாவல் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்நாவல் தேர்வு தொடர்பாக ஈடுபட்டிருந்தோருக்கு நாவலின் உள்ளடக்கம் தமிழர்களின் வாழ்வியலையும் மனதையும் பாதிக்குமெனத் தோன்றவில்லையா!

ஏதோவொன்று எங்கோ இடிக்கின்றதல்லவா? வாழ்க ஒரே மலேசியா! வளர்க நம் ஒற்றுமை! பெருகத் தமிழர்களின் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை¨!

You can leave a response, or trackback from your own site.

14 Responses to “இண்டர்லோக் இலக்கியப் புத்தகம் இந்திய தாய்மார்களின் தூய்மையை இழிவுபடுத்துகிறது”

  1. சிவசங்கர் says:

    இந்நாட்டில் இந்திய வம்சாவளியைச் சார்ந்தவன் என்று சொல்லிக் கொள்வதில் நான் என்றுமே சங்கடப்பட்டதில்லை. ஆனால் எனது இனத்தை இத்தனை இழிவாக வருணிக்கப்பட்டதைக் கண்டு கொந்தளித்து போயிருக்கிறேன். ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. இந்நாவலை எத்தனை இந்திய ஆசிரியர்கள் போதிக்கப் போகின்றனரோ! ‘ஒரே மலேசியா’ இது போன்று சங்கடங்கள் தரும் வரை வெற்றியடையப் போவதில்லை, நான் ஆதரிக்கப் போவதுமில்லை.

  2. mahendran says:

    shocking to read this …

  3. குடிமகன் says:

    தேசிய இலக்கியவாதி எழுதியிருத்தால் அதில் தேசியம் இருக்க வேண்டும். அவர் சாதி துவேசம் அல்லவா எழுதியிருக்கின்றார். அவர் தேசிய இலகிகியவாதியல்ல. தேசிய துவேசவாதி. அவருடைய இந்த இண்டர்லோக் என்ற படைப்பை எரியூட்ட நினைப்பதில் தவறில்லை. அரசாங்கம் இப்புத்தகத்திற்கு தடைவிதித்து மீட்டுக்கொள்ள வேண்டும். ஒற்றை மலேசியாவை ஆதரிக்கும் ம.இ.கா அமைச்சர்கள் பதவியில் இருந்து என்ன பயன்? -குடிமகன்-

  4. mvpara says:

    those u wrote tis , is real idiot.muttal .muttal thane ingga atti seigiran

  5. Rani says:

    யாரை சொல்லி என்ன பயன்? நம்மிடையே ஒற்றுமை இல்லாமையே மற்ற இனத்தார் வாய்ப்பாக ஏற்படுத்திக் கொள்கின்றனர். ஒட்டு மொத்த இந்திய சமுதாயத்தை பிரதிநிதிக்கிறோம் என்று உரக்க கூறிகொள்ளும் ம. இ. கா. என்ன செய்து கொண்டிருகின்றது… அது என்ன செய்ய முடியும், பணம் பதவி மட்டுமே கிடைத்தால் போதும் என்று தானே அவர்கள் பதவியில் இருகிறார்கள்… பாவம் நம் தமிழினம், காப்பாற்ற யாரும் இல்லை… காலம் தான் பதில் சொல்ல வேண்டும்…

  6. Manogaran A/l Munusamy says:

    Saya terperanjat YB Wee Ka Siong Dalam penemubualannya hari ini menegaskan bahawa secara peribadinya beliau beliau tidak menemui ‘cacat-cela’ pada kandungan buku tersebut dan Unsur-unsur yang menyentuh sensitiviti seperti didakwa hanyalah tafsiran dangkal segelintir pihak.
    Adakah beliau cuba mengatakan bahawa memang betul kesemua orang India yang datang ke Malaysia pada masa itu adalah Pariah dan memang betul seperti yang dikatakan layanan kita di India pada masa itu…kalau Orang cina dikatakan begitu adkah dia sanggup menerimanya dengan mengatakan tiada apa apa unsur cacat cel di buku itu….Yb Wee ka Siong perlu meminta secara terbuka untuk kenyataan ini.Begitu juga kenyataan oleh Malaysiakini yang mengatakan India Melenting dan kandungan Interlok tidak melampau dan berasas.Saya ingin menegurkan orang yang menulis kenyataan itu di Malaysia.com. veris melayu pada 5hb January.Mereke juga perlu tampil meminta maaf kepada Kaum India seluruh negara kerana menulis tanpa mengambil kira perasaan kaum India di negara ini.Silalah menganggap anda sebagai kaum india dan fikir perasaan kami.Adakah anda tidak terguris dengan kenyataan oleh Interlok????…..

  7. cm says:

    Pada pendapat saya ini adalah satu perkara mudah. Masyarakat India merasai novel ini menghinakan mereka dan banyak NGO, individu dan pemimpin memohon JASA BAIK KERAJAAN MALAYSIA melarang atau memperbetulkan kandungan novel tersebut. PM yg melaung laungankan SATU MALAYSIA & Timbalan menteri pula MENTERI PENDIDIKAN befikir panjang utk tarik balik novel ini atau membetulkan kandungan. Adakah KERAJAAN mengalami kerugian berbillion billion dgn tarik balik novel ini? Apakah muslihat yg sembunyi dlm kandungan novel ini sehingga ada pihak bermati mati mempertahankan novel ini. Siapakah memberi hak untuk melukan hati org lain? Biar PEMIMPIN kita IKHLAS dgn konsep SATU MALAYSIA. Pemuda masa depan sdg memerhatikan segala galanya. Adakah Masyarakat India harus memohon sedekah dpd KERAJAAN utk menjaga maruah sendiri? We r very hurt “BAPA satu MALAYSIA you are continue allowing others to hurt us. If you have no heart to protect us is fine, pls don’t HURT us.

  8. Dutchess says:

    What is the meaning of “One Malaysia” if you can’t have an open mind to think. Do you want to produce more racist youngsters in future and bid goodbye to the “One Malaysia” concept, then continue publishing it. It’s the 21st century. Look up at people’s achievements, not condemning them. The funniest part is MIC is doing nothing but snoozing. Why are they not doing their duties? Are they expecting someone to pay money to solve this problem? Ladies and gentlemen, wake up before it’s too late. I’m not being a racist here, but condemning other society will only cause havoc and its unnecessary. Enough damage done.

  9. முதல்வர் says:

    *f… off lah stupid coconut who wrote this book…memang bodoh suka2 je padai tulis,,,kalau banga lain tulis banga melayu apamacam..sudah isu besar……bodohX1000000000 ~

  10. cm says:

    Sorry lah bro, this is not something new, MIC is tied dogs.

  11. Kaasu says:

    அந்த இனத்தில் பிறந்த நான் பெருமைப்படுகிறேன்

  12. s.maniam says:

    even former malaysian prime minister Dr .Mahathir Mohamad also keturunan india, is he a paraya, if yes then all the malays in malaysia also parayas.
    please stop this nonsence and if the goverment dont stop this novel all the indians in malaysia have to gather infront of ministry of education and burn the novel.

  13. desan says:

    Penulis buku tidak sedar sensitiviti sesuatu kaum. Kalaupun benar apa yang dia tulis bukan semua yang benar boleh ditulis untuk bacaan umum! Saya hairan bagaimana panel pemilihan buku untuk sekolah boleh meluluskan buku ini? Adakah semua ahli panel BODOH? Ahli panel mesti terdiri dari 3 kaum. Baru boleh faham sensitiviti sesuatu kaum. SUDAH MENJADI LUMRAH SASTERAWAN DAN AHLI POLITIK SERING MENGHINA KAUM INDIA DAN KAUM CINA DAN AGAMA. KALAU MENGHINA ORANG MELAYU DAN ISLAM SATU NEGARA BERGELORA. MANALAH ADIL?

  14. அறவேந்தன் says:

    இந்த அப்துல்லா உசேனின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதைப் பள்ளியில் ஒரு பாடப் புத்தகமாக அனுமதித்திருப்பது, மலேசியக் கல்வியமைச்சின் மாபெரும் தவறாகும். அதை இன்னமும் மீட்டுக் கொள்ளாமலிருப்பது ஏன்?

    இது ஒரு புறமிருக்க, நாமும் இதற்கு ஒரு வகையில் காரணம்தானே.
    நம்மில் எத்தனை பேர் சாதியை விடாமல் பற்றிக் கொண்டிருக்கிறோம்? எத்தனையோ குடும்பங்களில் சாதி இன்னமும் இருக்கின்றது. திருமணக் காலங்களில், திருமண அழைப்பிதழ்களில், இதைக் கண்கூடாகப் பார்க்கலாம்.

    இந்த ”இலக்கிய நாவலை” எதிர்ப்பவர்கள் யாவரும் முதலில் தங்களின் இல்லத்திலிருந்தும் உள்ளத்திலிருந்தும் சாதியை நீக்க வேண்டும்.
    செய்வார்களா?
    இந்த நாட்டில் சாதிச் சங்கங்கள் காளான்கள் போல் முளைப்பதற்கு யார் காரணம்?

    சாதிச் சங்கங்களையும் நீங்களே நடத்துவீர்கள்.
    பிறகு, இதுபோல் ஏதேனும் நடந்துவிட்டால், குறை கூறுவதெதற்கு?, என்று அவன் கேட்டால், என்ன சொல்லப் போகிறோம்?

    சிந்திப்போமா?

No comments:

Post a Comment