கல்வி அமைச்சின் அதிகாரிகளோடு நடந்த கலந்துரையாடலில் ஒரே வாரத்தில் இண்டர்லோக் நாவல் மீட்டுக் கொள்ளப்படும் என்று பிரதமர் துறை துணை அமைச்சர், அறிக்கை வேந்தர் முருகையா அறிவித்தார். டிசம்பர் 16இல் மக்கள் ஓசையில் வண்ணப்படமாக செய்தி வந்துவிட்டதால் அவரைப் பொருத்தமட்டில் அவர் பெரும் சாதனை செய்துவிட்டார். துணைப்பிரதமர் முகைதீன் யாசினுக்குக் கடிதம் எழுதப் “போகிறேன்” என்று அறிவித்த அளவில் அமைச்சர் டத்தோ டாக்டர் சுப்ரமணியம் அவர் கடமையைச் செவ்வனே செய்துவிட்டார்.
இண்டர்லோக் பாடப்புத்தமாகப் பள்ளிகளுக்குப் போய்விட்டது. இந்த நூலைக் கல்வி அமைச்சு மீட்டுக் கொள்ளுமானால் அதை எதிர்த்துப் பெரிய அளவிலான போராட்டத்தை நடத்தப் போவதாக மலாய் அமைப்புகள் அறிவித்துள்ளன. அப்படியான ஒரு போராட்டத்தை அவர்கள் நடத்தாவிட்டாலும் கல்வி அமைச்சு இதனை மீட்டுக் கொள்ளாது என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.
இழிவுபடுத்துவது மட்டுமல்ல நோக்கம்
இண்டர்லோக் விவகாரம் வெளிப்பட்டவுடன் அதன் கதைத்தலைவன் மணியம் பறையன் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை மட்டுமே கண்டனம் செய்து ஆரவாரிக்கின்றனர் நமது சமூக ஆர்வலர்கள். உண்மையில் அந்த ஒரு சொல்லைக் கூட மன்னித்து மறக்கலாம். அதைவிடவும் அக்கதையின் நோக்கம் மிகுந்த ஆபத்தானதாக உள்ளது.
நூலில் உள்ள நான்கு பகுதிகளில் முதல் மூன்று பகுதிகள் மலாய், சீனர், இந்தியர் ஆகியோரின் வரலாற்றுப் பின்னணிகளை விவரமாகக் கூறுகின்றன. மலாயர் இந்த மண்ணின் மைந்தராய் வந்தாரை வாழ வைக்கும் தாராள சிந்தையுடைவராய்க் காட்டப்படுகின்றனர். சீனரும் இந்தியரும் பிழைப்பு தேடி மலாயாவுக்கு வந்தவர்கள் என்ற கருத்து வலியுறுத்தப்படுகின்றது. சீனர்கள் மலாய்க்காரர்கள் நிலத்தை கையகப்படுத்திக் கொள்வதாகவும் மலாய்க்காரர்களில் சிலர் நிலமும் வீடும் இன்றித் தவிப்பதாகக் கதை போகிறது. அந்நியர்களிடமிருந்து நாட்டையும் தங்கள் வாழ்க்கையையும் காப்பாற்றிக் கொள்ள மலாய்க்காரர்கள் ஒன்றுபட வேண்டும் என்று குரல் எழுப்பப்படுகிறது.
இவர்களில் தென்னிந்தியரின் வரலாற்றுப் பின்னணி தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தென்னிந்தியாவில் மிகுந்த வறுமையில் வாடினர். சாதி அடிப்படையிலான தொழில்களையே அவர்கள் செய்ய முடியும். சுதந்திரமாக எந்தத் தொழிலும் செய்ய முடியாது. ஆகவேதான் பறையர் என்ற தாழ்த்தப்பட்ட மக்கள் மலாயாவுக்குப் பிழைப்பு தேடி வந்தனர். கதைத்தலைவன் மணியம் கேரளாவின் திருச்சூர் என்னும் பகுதியிலிருந்து நாகப்பட்டினம் வந்து கப்பல் ஏறி மலாயா வருகிறான். எல்லாரும் பறையராக இருந்தமையால் கப்பலில் ஒருவரோடு ஒருவர் இடித்துக் கொள்வதற்கு அவர்கள் கூச்சப்படவில்லை. கப்பலில் அவர்கள் ஆடுகளைப் போல் அடைத்து வைக்கப்பட்டனர்.
மலாயாவில் அவர்கள் தோட்டங்களிலும் நகர்ப்பகுதிகளில் கூலிகளாக வேலை பார்த்தனர். மணியம் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான். அப்போது கேரளாவில் அவனுடைய நண்பனாக இருந்த சுப்பையா என்பவன் மணியத்துக்கு ஏற்கனவே கேரளாவில் மனைவி இருக்கிறாள் என்ற கூறி மணியத்தின் குடும்ப வாழ்க்கையில் குழப்பத்தை ஏற்படுத்துகிறான். உண்மையில் மணியத்தின் மனைவி இன்னொருவனோடு ஓடிப் போய்விடுகிறாள். சுப்பையாவோடு தகராற்றில் ஈடுபட்ட மணியத்தை தோட்டத்து துரை துப்பாக்கியால் சுட்டுக் காயப்படுத்துகிறான். தோட்டத்து மருத்துவ உதவியாளர் காயத்துக்குக் கட்டுப் போடுகிறார். தோட்டத்து மக்கள் உதவுகின்றனர். இப்படி முடிகிறது மணியனின் கதை. கதையின் தொடக்கத்தில் வருந்தி உழைத்தால் வராதது இல்லை என்று படைப்பாளர் குறிப்பிடும் பொன்மொழிக்கும் கதைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.
மணியத்தின் குடும்பத்தினர் என்னும் கதையின் முற்பகுதி தென்னிந்தியாவிலும் பிற்பகுதி மலாயாவிலும் நடைபெறுகிறது. இந்த இரண்டு பகுதிகளில் எந்தப் பகுதியாவது தேசிய ஒற்றுமைக்குத் துணையாய் இருக்க முடியுமா என்று சிந்தித்துப் பாருங்கள். இரண்டாவதாக வரும் சீனக் குடும்பத்தைப் பற்றிய கதையும் ஏறத்தாழ இப்படியே அமைந்துள்ளது. நான்காவது பகுதியாகிய “இண்டர்லோக்” சீனர்க்கும் இந்தியர்க்கும் மலாய்க்காரர்கள் கருணையோடு உதவி தேசிய ஒற்றுமைக்கு வழி காணுவதாக முடிகிறது.
மூன்று இனத்தினருக்கிடையில் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் நோக்கில் இந்த நூல் எழுதப்பட்டது என்று வாதிப்போர் ஒரு விஷயத்தைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். இருநூறு ஆண்டுகளுக்கு முன் சீனரும் இந்தியரும் இந்த நாட்டுக்கு எப்படி வந்தனர் என்ற வரலாற்றுப் பின்னணி நாளைய மலேசியாவின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு எப்படிப் பங்களிக்க முடியும் என்ற கேள்விக்கான பதிலில்தான் இந்த நாவலின் நோக்கம் வெளிப்படுகிறது
மனோவியல் போர்
சாதியக் கொடுமையால் பல சமூகச் சீர்கேடுகளோடு வாழ்ந்த தென்னிந்தியர் மலாயாவுக்கு வந்து இன்று வளமாக வாழ மலாய்க்காரர்கள் ஆதரவளித்தனர். இதற்காக இன்றைய இந்தியர் மலாய்க்காரர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். இந்தியர்களும் சீனர்களும் வந்தேறிகள். ஆகவே, மலாய்க்காரர்களின் சிறப்பு உரிமைகள் மீது கேள்வி எழுப்பக் கூடாது. கிடைப்பதை வாங்கிக் கொண்டு அமைதியாக இருக்க வேண்டும். உரிமைப் போராட்டம் எதுவும் நடத்தக் கூடாது. இக்கருத்துகளை இடைநிலைப் பள்ளி மாணவர்களின் மூளையில் திணிப்பதே இந்த நாவலின் நோக்கமாய் இருப்பது தெளிவாகிறது.
அப்படியல்ல, தேசிய ஒருமைப்பாடுதான் நோக்கம் என்றால் சீனரும் இந்தியரும் இந்த நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்குக் கடுமையாக உழைத்ததையும் பலர் உயிர்த் தியாகங்கள் செய்ததையும் சொல்லியிருக்கலாம். பிரிட்டிஷ் முதலாளிகளால் சுரண்டப்பட்டதால் தங்கள் தாய் நாட்டுக்குத் திரும்பிச் செல்ல முடியாமல் இந்த மண்ணுக்கு உரமாகிப் போன கதைகளைச் சொல்லியிருக்கலாம்.
அல்லது, மலாய் இனமும் மொழியும் மலாய் என்ற பெயரைப் பெறுவதற்கு முன்பே முதலாம் நூற்றாண்டில் தென்கிழக்காசிய நாடுகளுக்கு வந்த இந்தியர்கள் தமிழ், சமஸ்கிருதச் சொற்களால் மலாய் மொழியை வளப்படுத்தியும் வணிகத்தாலும் பண்பாட்டாலும் இந்தப் பகுதியை மேம்படுத்தியும் ஆற்றிய பங்களிப்பைச் சொல்லியிருக்கலாம். (Drs Ismail Hussein, Sejarah pertumbohan bahasa kebangsaan kita, ms 7-12, DBP 1966)
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த வரலாற்றைச் சொல்லாமல் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஒப்பந்தக் கூலிகளாய் வந்த தென்னிந்தியர் இந்தியாவிலும் மலாயாவிலும் கொண்டிருந்த சமூகப் பண்பாட்டு அமைப்பை இழிவாக விவரிப்பதற்கு வேறு என்ன நேர்மையான காரணங்களை இவர்கள் கூற முடியும்?
பறையா என்ற ஒரு சொல்லுக்கு மட்டும் கண்டனம் தெரிவிக்கும் இந்திய சமூக ஆர்வலர்கள் கதையை முழுமையாகப் படித்து நூலின் திரண்ட நோக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். படைப்பாளர் வெளிப்படையாகக் காட்டும் காட்சிகள் மூலம் மறைமுகமாக உணர்த்தும் கருத்துகளை உய்த்துணர வேண்டும்.
இந்தப் பாட நூல் வகுப்பில் கற்பிக்கப்படும்போது அந்த வகுப்பில் மலாய் மாணவர்களோடு இந்திய சீன மாணவர்களும் இருப்பார்கள். இந்திய, சீன சமூகத்தினரின் மலாயா வருகை பற்றி நூலில் உள்ள விஷயங்களை ஆசிரியர் எப்படியெல்லாம் விளக்குவார், மலாய் மாணவர்கள் எந்தெந்தக் கோணங்களிலெல்லாம் உரையாடல்களை எடுத்துச் செல்வார்கள் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். அந்த வகுப்பில் இருக்கும் இந்திய, சீன மாணவர்களின் மனம் புண்படும் அளவுக்கு உரையாடல் வளரும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.
இந்திய, சீன மாணவர்களை அவமானப்படுத்துவதன் மூலம் அவர்களைத் தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாக்குவதும் எதிர் காலத்தில் தங்கள் உரிமைகளுக்குப் போராடும் ஆற்றல் இல்லாதவர்களாக அவர்களை ஆக்குவதும் கல்வி அமைச்சின் உள்நோக்கம் என்பதை உணர முடியும். ஆக இந்திய, சீன மாணவர்கள் மீது அம்னோ தீவிரவாதிகள் தொடுக்கும் ஒரு மனோவியல் போர் இது என்பது தெளிவு. இந்த முடிவுக்கு வருவதற்கு அண்மைக் காலத்தில் அரசு அதிகாரிகள் உதிர்க்கும் இனவாத உரைகளைச் சான்றாகக் காட்டலாம்.
கடந்த பத்தாண்டுகளில் இனவாதம் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வளர்ந்துள்ளது. அம்னோ பேரவைகளில் மலாய் மேலாண்மை அழுத்தமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. பள்ளிகளில் பூமிபுத்ரா ஆசிரியர்கள் வெளிப்படையாகவே சீன, இந்திய மாணவர்களை “நீங்கள் வந்தேறிகள், உங்கள் நாட்டுக்குப் போய்விடுங்கள்” என்று பேசி வருகின்றனர். தமிழ், சீனப் பள்ளிகளை முடிவுக்குக் கொண்டு வரும் கருத்தில் ஒரே பள்ளி முறை மீண்டும் மீண்டும் பேசப்படுகிறது. இவை அனைத்தையும் இண்டர்லோக் நூலின் உள்ளடக்கத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் மலாய் மேலாண்மையைப் பள்ளி மாணவர்களிடம் வலியுறுத்துவதே இந்த நூலின் நோக்கம் என்பது தெளிவாகிறது.
அம்னோவின் இனவாதத்துக்கு இசைவாக இந்த நூல் அமைந்துள்ளது. மலாய் இனவாதிகளின் குரலை இலக்கியம் என்ற பெயரில் மாணவர்களின் செவிகளுக்கு எட்டும்படிச் செய்யும் முயற்சியே இது. இந்த நூலை மீட்டுக் கொள்ள மறுப்பதானது தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரான செயல் ஆகும்.
பாரிசன் அம்னோ அரசாங்கம்,இவர்களின் மாண்டோர்கள்… MIC , INTERLOK நாவல் பற்றி கவலை பட மாட்டார்கள் !!,இவர்களுக்கு பதவி பட்டம் ,ஆ ட்சி இவைகள்தான் முக்கியம் ,PKR …இந்திய மண்டோர்களுக்கு எதை பற்றியும் கவலையில்லை !! நாடாளும் மன்றத்திலோ ,வெளியிலோ தமிழனை ,….தமிழ் மொழியை…. பற்றியோ !பேசினால் அடுத்த தேர்தலில் மலாய் காரர்களின் ஒட்டு , போய்விடும் என்ற பயம் !!! தேர்தலுக்குள் கொஞ்சம் அரிசி ,20.வெள்ளி ஹெம்பேர் .கொடுதால் ,நாய் போல் வாழை ,ஆட்டிக்கொண்டு 3 மாததில் எல்லாவற்றையும் மறந்து விட்டு ஒட்டு போட்டு விடுவார்கள் என்ற ,அம்னோ BN ,அரசாங்கத்தின் கூற்றை உண்மையகிவிடுவர்கள் !!!! பவம் தமிழன் ,மீண்டும் அடிமை வாழ்க்கை ….25 /NOV /2007 ஏன் தமிழன் உரிமைக்காக போராடினான் நாயை விட கேவலமாக நடதபட்டான் ,யாரால் இந்த் ஆட்சி கிடைத்தது எதை பத்ரியும் யாருக்கும் கவலை இல்லை ….மானம் உள்ள தமிழா !!! எழுந்திரு !!!!
the book is written to embrass Malaysian Indians and Chinese
manamulla tamilan bn arasangattu oottu pooda mattan. appadi pottal avan oru sutta manangkette paraiyan
there are few things we need to look why the book at school.
1.this is truly politic sendiwara(trend)
2.MIC with new leadership (preplan)
3.this is to get indians confident on mic for bn after next drama
4.before TENANG election bn will announce ban this book all over malaysia
5.the next …………etclah
உண்மைதான்.. திடீரென்று புத்தகம் மீட்டுக்கொள்ளப் பட்டதாக அறிவிப்பு செய்வார்கள்.. தமிழர் உள்ளமெல்லாம் குளிர்ந்து போகும்.. பாரிசானுக்கு ஓட்டு போடுவார்கள்.. பரிசான் வெல்லும்.. மீண்டும் போராட்டம் வரும்.. இப்படியே தான் நமது கதை ஒடிக் கொண்டிருக்கிறது.. போர்ட்டிக்சன் பகான் பினாங்கில் பிஎன்னுக்கு ஓட்டு போட்ட நாய்கள் இப்போது செருப்படி படுகின்றன… ஆனாலும் புத்தி வராது..
arumai yana poiyai unmaiyaka vendum endru namathu BN arasangam alagaaga nadagam nadathik kondirukkirathu!!!
BN ku vote podu vathu peritalla aanal nammil yettanai perukku intha naval lil ulla vishayam terinthirukkum endru naam aaraya vendum….20% mattume intha visyama nammil terinthirukku…vittil suntv mun amarnthu antha katayai maru naal vivathikkum maathiri intha visha yattai nammavargalil palar seiya tavari vittanar.Bn arasangattai kurai kuri oru projanamum illai….nammai naame kurai kuri kolla vendum…naam muthalil nammai sutri enna nadakirathu endru terinthukolla vendum illaiyel nammai innum muttal aaki kondiruppargal….
veetil suntv paarpathai nirutti vittu itharku enna thirvu kaana mudiyum endru ella indiyanum yosikka vendum…illaiyel ithu naladai vil makki mannaaga poi vidum enbathu en karuttu!!!
mr ravi need not use the word”manangetta paraiyan”. the whole issue also about caste. please all tamilans avoid casteism. use the word tamilan. this does not reflect the lives of tamilans in malaya or malaysia. it creates conflicts amoung tha races. it needs to be replaced with any other useful book.
Nobody have the right to say “paraiah”.The book must take back by Goverment….Malaysia malay also not 100% origin,they come from INDONESIA…ask them write about this…bullshit….Who is “IBRAHIM ALI”?malaysia PM or chief jugde?better he keep his mouth shut….WHY WY happen to malaysia indian…WE not support each other……….
ஐயா, நாவலின் ஆணிவேரை இனங்காட்டிவிட்டீர்கள்! அவர்களின் உள்நோக்கம் என்ன ? அவர்களின் இதய மாசு என்ன? என்பதையெல்லாம் இந்த நாவலைக்கொண்டு எப்படி நிறைவேற்றிக்கொண்டார்கள் என்பதை சரியாக படம்போட்டுக் காட்டிவிட்டீர்கள். இந்தக் கட்டுரையை தயைகூர்ந்து ஆங்கிலப் நாளிதழில் வெளியிட்டு அவர்களின் போலி முகத்திரையை கிழித்தெறியவும். ஒன்றைப்பற்றி கருத்துரைத்தால் நுனிப்புல் மேயக்கூடாது. உங்களைப்போன்றவர்கள் நிறைய எழுதவேண்டும். வாழ்த்துகள்.