Wednesday, January 12, 2011

மகாஜருக்குக் காத்திருக்கிறார்கள்

ஜா. சுகித்தா

ஐந்தாம் படிவ மாணவர்களுக்காக வெளியிடப்பட்டுள்ள இண்டர்லோக் என்ற இலக்கியப் பாடநூல் இந்நாட்டு இந்தியர்களிடையே மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தரப்புகள் இது குறித்த விவாதத்தில் நியாயமாகவும் பாரபட்சமின்றியும் நடந்துகொள்ள வேண்டும் என்று துணைக் கல்வி அமைச்சர் டாக்டர் வீ கா சியோங் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், இவ்விவகாரம் குறித்து எந்த ஒரு முடிவும் எடுப்பதற்கு முன்பு மஇகாவின் மகஜருக்காக காத்திருப்பதாக அவர் கூறினார்.

அப்பாடநூல் முற்றாக உடனடியாக மீட்டுக்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சிலர் அந்நூலில் காணப்படும் உணர்ச்சியைத் தூண்டும் சொற்களை அகற்றினால் போதுமானது என்றும் கூறுகின்றனர்.

மஇகா தலைவர் ஜி. பழனிவேல் அப்புத்தகம் தடை செய்யப்பட வேண்டியதில்லை. ஆட்சேபத்திற்குரிய சொற்களை அகற்றினால் போதுமானது என்று கூறியுள்ளார்.

மேலும், இதனை உடனடியாகச் செய்ய வேண்டும். இல்லையென்றால், மக்களின் எதிர்ப்பை எதிர்நோக்க வேண்டிய வரும் என்று தெரிவித்துள்ளார். அவருடைய கவனமெல்லாம் தெனாங் சட்டமன்ற இடைத் தேர்தலில் இந்தியர்களின் வாக்குகள் பாரிசானுக்கு எதிராகப் போய்விட்டால் என்னவாகும் என்பதாகும்.

அக்கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் இப்படி ஒரு புத்தகம் வெளியிடப்பட்டது குறித்து வருத்தம் தெரிவித்ததோடு கல்வி அமைச்சரிடம் பேசப் போவதாகவும் பின்னர் அந்த அமைச்சுக்கு கடிதம் எழுதப் போவதாகவும் கூறியிருந்தார்.

ஆனால், துணைக் கல்வி அமைச்சர் மஇகாவின் மகஜருக்காக காத்திருப்பதாக நேற்று கூறுகிறார்.

மஇகா இந்நாட்டு அரசாங்கத்தின் ஓர் அங்கம். அம்னோ மற்றும் மசீச ஆகியவற்றோடு மஇகாவுக்கும் இந்நாட்டு அரசாங்கம் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் சமமான பொறுப்புண்டு. கல்வி அமைச்சு எடுக்கும் முடிவும் நடவடிக்கைகளும் அரசாங்கத்தின் முடிவும் நடவடிக்கைகளுமாகும். அரசாங்க கொள்கைகளும் அவற்றின் அமலாக்கங்களும் அமைச்சரவையின் முழுப் பொறுப்பு ஆகும்.

இப்போது, கல்வி அமைச்சு அனுமதித்திருக்கும் இலக்கியப் பாடநூல் இண்டர்லோக் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள பதற்றத்திற்கு அமைச்சரவை பொறுப்பாகும். அமைச்சரவையில் மஇகா இடம் பெற்றுள்ளது. ஆக, மஇகாவும் இதற்குப் பொறுப்பாகும்.

மேலும், இந்நூல் வெளியிடப்பட்டது குறித்து வருத்தப்படுவதோடு அதன் விளைவுகள் குறித்து அச்சம் தெரிவிக்கும் மஇகா, இந்நூல் வெளியிடப்படுவதற்கு முன்பே ஏன் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை? அரசாங்கத்தின் ஓர் அங்கமான மஇகாவுக்கு இந்நூல் குறித்த தகவல் எதுவும் கொடுக்கப்படவில்லையா? கலந்தாலோசிக்கப்படவில்லையா? அல்லது, மஇகா ஒரு பொருட்டாக மதிக்கப்படுவதில்லையா?

இந்திய சமூகத்தைப் பாதிக்கும் அரசாங்கத்தின் எந்த ஒரு முடிவுக்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்த பிறகுதான் மஇகா கவனம் செலுத்தத் தொடங்குகிறது.

எஸ்பிஎம் தேர்வுக்கான பாடங்கள் குறித்த விவகாரத்திலும் இதே நிலைதான். மண முறிவு பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் இஸ்லாமிய பெண்களுக்கு அரசாங்கம் உதவ முன்வந்தபோது, அதே நிலையில் இந்தியப் பெண்களுக்கு ஏன் உதவி இல்லை என்ற குரல் எழுந்த பிறகுதான் மஇகா வாயைத் திறந்தது. இப்பிரச்னைகள் தீர்க்கப்பட்டு விட்டனவா என்பது வேறு கேள்வியாகும்.

இந்திய சமூகத்தின் மூச்சாக அரசாங்கத்தில் அங்கம் பெற்றுள்ளதாக கூறிக்கொள்ளும் மஇகா இந்த இண்டர்லோக் விவகாரத்தில் அதன் நிலை என்ன என்பதைத் தெரிந்துகொள்ள ஒரு மசீச துணைக் கல்வி அமைச்சர் இன்னும் காத்திருப்பதாக கூறுவது இந்திய சமூகத்தின் தலைவர்கள் இது பற்றி எதுவுமே கூறியதில்லை என்பதோடு எவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது என்று கூறலாம்.

இந்திய சமூகத்தை இழிவுபடுத்தி எழுதப்பட்டிருக்கும் இந்நூலை மாணவர்களுக்கு இலக்கியப் பாடநூலாக பயன்படுத்த அனுமதி அளித்ததன் காரணமாக ஏற்பட்டிருக்கும் பதற்றத்திற்கு கல்வி அமைச்சின் துணை அமைச்சரான மசீசவின் வீ கா சியோங்க்கும் முழுப் பொறுப்புண்டு. செய்யக்கூடாததைச் செய்துவிட்டு இப்போது இவ்விவகாரத்தை நியாயமாகவும் பாரபட்சமின்றியும் விவாதிக்க வேண்டும் என்று தத்துவம் பேசுகிறார்.

ஓர் இனத்தை இழிவுபடுத்தி இளவயதினரின் சிந்தனையில் இனத் துவேசத்தைத் திணிப்பு தவறு என்று கூறும் மஇகா மகஜர் வரும் வரையில் இவர் காத்திருக்க வேண்டுமா?

இந்நாட்டிற்கு சீனர்கள் தங்களுடைய உடலை விற்க வந்தவர்கள் என்று இனவாதியான நசீர் கூறியபோது குதித்தெழுந்த மசீசவின் பிரதிநிதியான துணைக் கல்வி அமைச்சருக்கு இண்டர்லோக் பாடநூலில் மணியம் இதர இந்தியர்களைப்போல் தன்னுடைய மனைவியின் பாதுகாப்பு பற்றி கவலைப்படவில்லை என்று எழுதப்பட்டிருப்பதின் உள்நோக்கத்தைத் தெரிந்துகொள்வதற்கு மஇகாவின் மகஜர் தேவைப்படுகிறது!

கல்வி அமைச்சரைப் பற்றி எதுவும் கூறவேண்டியதில்லை. அவர் ஓர் இன மலேசியாவின் ஏகபோகத் தலைவர்.

மஇகா ஓர் எதிர்க்கட்சிபோல் செயல்படாமல், ஓர் ஆளுங்கட்சியாகச் செயல்பட வேண்டும். போராட்டம் நடத்துவது, மகஜர் கொடுப்பது எதிர்க்கட்சியின் முக்கியமான செயல்முறையாகும். ஆளுங்கட்சி அதன் அரசாங்கத்துடன் போராட்டம் செய்வதில்லை, அதனிடம் கோரிக்கை விடுப்பதில்லை. சொன்னதைச் செய்ய வேண்டியது அதன் கடமையாகும். மஇகாவிற்கு அக்கடமை உண்டு.

ஆளுங்கட்சியான மஇகா இண்டர்லோக் பாடநூலை ஏன் அனுமதித்தது என்பதை மக்களுக்கு விளக்க வேண்டும். இப்பிரச்னையை அது தீர்க்கத் தவறினால், அரசாங்கத்தை விட்டு வெளியேறுமா என்பதையும் அறிவிக்க வேண்டும்.

You can leave a response, or trackback from your own site.

5 Responses to ““இண்டர்லோக்” பாடநூல்: மஇகாவின் மகஜருக்காக காத்திருக்கிறாராம் துணைக் கல்வி அமைச்சர்”

  1. tamil says:

    ஐயோ நீங்க எவளவு சொன்னாலும் அவுங்க
    ஸ்டைலே வேறங்க ,ஒண்ணுமே நடக்காது
    ஜால்ரா ஆ வெரிகுட் …….

  2. sharama says:

    அவதூறு வழக்கு போடலாம்.ம இ கா செய்யுமா?மன்னரிடம் முறையிடலாம். வாக்களிப்பில் எண்ணத்தைத் தெரிவிக்கலாம்.அடுத்த முறை இன்னும் மோசமாக இன்னொரு புத்தகம் வருமே? என்ன செய்யலாம்?

  3. malaysia tamilan says:

    MIC yin sagunikaleh..niggal ehllam manitharkal taanah..!! Un kudumpathai..un manaviyai pesukiran-ehluthukiran unnaku suudu-soranai illaiyah..!! Alathu awan interlok kil ehluthiyathu unnmaithanah..? apadiyendral un kudumpathai kaaka mudiythi neer (MIC) intha tamil samuthayathai kaaka pokiraiyah..!! Maanamkehdavaneh..!!

  4. எதிர்காலத்தில் நமது பிள்ளைகளை, நம்மை மதிக்காத – உதாசீனப் படுத்தும் கல்விமுறையை கற்கும்படிச் செய்யவேண்டுமா? நமது ஆணிவேரையே அசைக்கும் முயற்சி முன்னேடுக்கப்படுவதைக் காண்கிறோம்.நாம் கண்களை மூடிக்கொண்டு வெறுமனே இருக்கப்போகிறோமா? நமக்கு உணர்வே இருக்காது என்ற திமிரா? இவர்களால் மாத்திரம்தான் நாலாந்தர நாவல்களை எழுத முடியுமா? நம்மால் எழுதமுடியாதா? முடியாமலல்ல நமக்கு எதை எப்படி எழுதவேண்டும் என்பதெல்லாம் தெரியும் . பண்பாடு தெரிந்தவர்கள் நாம். பண்பாடற்றவர்களிடம் இன்னும் எத்தனைகாலம்தான் அதை எதிர்பார்த்துக் காத்திருப்பது? இந்தியனே … இன்னும் ஏன் உறக்கம்? தமிழர் சங்கம் , தெலுங்கர் சங்கம், மலையாளி சங்கம் , சீக்கியர் சங்கமென்று வைத்துக் கொள்வதெல்லாம் ஊறுகாய் போடுவதற்கா? சிதறு நெல்லியாய் நம்மை சிதைக்க நினைக்கும் அரசியல் அயோக்கியத்தனத்தை முறியடிக்க வேண்டாமா? சந்தற்பவாதிகளாய் இன்னும் எத்தனைக் காலங்கள் காத்திருக்கப் போகிறீர்கள்?

  5. Mano says:

    I feel ashame on u Dato Wee Ka Siong !!!…I read you press statement recently in which u said that “Interlok” contains nothing sensitive or false statements against Indians and we Indians are Protesting for our own political interests on this book…And for you,Do something for save our dignity which is shaken now…..if cant do anything just keep shut up….and dont make our Indians provoked because of your statements….
    And Mr.Murugiah,Eventough im not a pilitician and not interest in politics and stuffs,I as a Indian just done my part because its insulted and touched my dignity, self-respect ready and time for me to wake-up to protect my dignity…..part of it we as “Johore Indians” had organize a all Indian NGO meeting last week in Johor to talk about the issue and we came out with decision to fight till the end for the ban of the book….soon you all Malaysian Indians will know the outcome of Johore Indians NGO’s decision regarding this book….Its more to diplomacy as well…
    And for you dato Wee Ka Siong, remember we are not racist for asking this book to be ban…..because if this book in use, Indians will be backwards 40 years as our new generations(Including Chinese,Malay,Indians) will be strongly planted about the Casts and stuffs and also the bad opinions about the Indian natives in Malaysia in which we will be back to the Malaysian Indians life 40 years ago in rubber estates…….

Leave a Reply

No comments:

Post a Comment